திங்கள், 9 மே, 2022

தன்னேரிலாத தமிழ் –447: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –447: குறள் கூறும்பொருள்பெறுக.

 

523

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்

கோடின்றி நீர்நிறைந் தற்று.


சுற்றத்தினரோடு மகிழ்ச்சியுடன் கலந்து உரையாடி உறவாட வாய்ப்பில்லாதவன் வாழ்க்கை,  வலிய கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போன்று பயனற்றதாம்.


மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி

இரந்தழைப்பார் யாவரும் அங்கில்லை-சுரந்தமுதம்

கற்றா தரல்போல் கரவாது அளிப்பாரேல்

உற்றார் உலகத் தவர்.” –நல்வழி, 29.


மரம் கனிகளைக் கொடுக்கின்றபோது  யாரும் கூவி அழைக்காமல் வெளவால்கள் தானே வந்துசேரும். பசு தன் கன்றுகுக் காலம் அறிந்து பால் கொடுத்துப் பசி தீர்க்கும். அதுபோல்,  தன்னை நாடி வந்தவர்களுக்கு  எதனையும்  மறைக்காமல், இருக்கின்ற பொருளைக் கொடுத்துத் துன்பம் தீர்த்தால், உலகத்தார் யாவரும் உறவினர் ஆவர்.

2 கருத்துகள்: