சனி, 7 மே, 2022

தன்னேரிலாத தமிழ் –446: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –446: குறள் கூறும்பொருள்பெறுக.


517

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.


இந்த வேலையை, இன்ன நுட்பத்தால், இவனே முடிக்க வல்லான் என்று ஆராய்ந்த  பிறகு, அந்த வேலயை அவனிடத்து ஒப்படைக்க வேண்டும்.


எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்யவொண்ணாது

 புண்ணியம் வந்து எய்த போது அல்லால் -கண் இல்லான்

 மாங்காய் விழ எறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே

ஆம் காலம் ஆகும் அவர்க்கு, ” – நல்வழி, 4.


எத்தகைய சிறப்பான தகுதியும் திறனும் பெற்றிருந்தாலும் நினைத்த எந்த ஒரு செயலும் முற்பிறவியின் நல்வினைகள் கூடிவரும் காலத்தில் தானே நடக்கும்.  காலத்தைக் கருத்தில் கொள்ளாமல், காலமல்லாக் காலத்தில் அச்செயலை  முடிக்க எண்ணுதல், கண்களை இழந்தவன் மாமரத்தில் உள்ள மாங்காயைப் பெறுவதற்குக் கையில் இருந்த கோலை மரம் நோக்கி வீசி எறிதல் போன்றதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக