வெள்ளி, 6 மே, 2022

தன்னேரிலாத தமிழ் –445: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –445: குறள் கூறும்பொருள்பெறுக.


513

அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு.


அன்பு, அறிவு, துணிவு, ஆசையின்மை ஆகிய இந்நான்கு தூய குணங்களையும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவனையே செயலாற்ற வல்லவனாகத் தெளிய வேண்டும்.


வெம்மை உடையது அடிசில் விழுப் பொருட்கண்

செம்மை உடையதாம் சேவகம் தம்மைப்

பிறர்கருதி வாழ்வதாம் வாழ்க்கை இம்மூன்றும்

உறவருவது ஓர்வதாம் ஓர்ப்பு. “  அறநெறிச்சாரம், 205.


வெம்மையாக இருப்பதே உண்பதற்கு ஏற்ற உணவு ; குறைவற்ற வருவாயோடு நேர்மை தவறாமல் இருப்பதே பதவி ; தம்மைப் பிறர் எப்பொழுதும் நினைவில் கொள்ளும்படி ஈகைக் குணத்துடன் வாழ்வதே வாழ்க்கை ஆகிய இம்மூன்றையும் பெற வைப்பதே ஆராய்ந்து தெளிவதாகிய வினை முடிக்கும் துணிவாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக