சனி, 18 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் -42: உண்ணாநோன்பிருங்கள்; உடல் நலம் பேணுங்கள்.

 

தமிழாய்வுத் தடங்கள் -42: உண்ணாநோன்பிருங்கள்; உடல் நலம் பேணுங்கள்.


ஆண்டுக்கு ஒரு முறை எட்டு நாள்கள் உண்ணா நோன்பிருங்கள்உண்ணா நோன்பிருத்தலை வெறுப்பவர்களுக்கு ஒரு செய்தி. ஓர் ஆண்டுக்கு எட்டு நாள்கள் பட்டினியாக இருந்தால்  நீங்கள்  உங்களுடைய நோய் எதிப்பாற்றலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்குப் பெறமுடியும்.

 உணவின்றி இருப்பதால் உடலில் ஒருவித தூண்டுதல் ஏற்பட்டுப்  பழைய, கெட்டுப்போன அணுக்களைப் புதுப்பித்தல் நிகழ்கிறது. சிறப்பாக வயது முதிர்வாலும் அல்லது புற்று நோயினாலும்  நோய் எதிர்ப்பாற்றல்  சிதைந்திருப்பினும் உண்ணா நோன்பு புதுப்பித்து விடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நீங்கள் பட்டினியாக இருக்கும்போது இயற்கையாகவே  உடலமைப்பு ஆற்றலைச் சேமிக்க முயல்கிறது. அப்படி நிகழும் இச்செயற்பாடு ஏராளமான நோய் எதிர்ப்பாற்றல் அணுக்களை மறுசுழற்சியால்  பெறினும் அவை சிதைந்த அணுக்களுக்குத் தேவையில்லை.என்கிறார் வால்டர் லாங்கோ, ’நீண்ட நாள் வாழ்வு”  ஆய்வு வல்லுநர், தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம்’

இவ்வாய்வின் ஆய்வாளர்கள், பட்டினியாக  ஆறு மாதத்திற் கொருமுறை  இரண்டு முதல் நான்கு நாள்கள்  பட்டினியாக இருந்தால் உடல், உயிர் ஆக்கம் பெறுவதற்காக விசையொடு உந்தப்படுகிறது இதனால், உயிராற்றலுக்குத் தேவையான கொழுப்பு, சருக்கரை சத்துக்களைச் சேகரித்துக்கொள்வதோடு பழைய அணுக்களையும்  செயலிழக்கச் செய்துவிடுகிறது.

  உடலானது  மூலஉயிரணுவுக்கு சமிக்ஞை அனுப்பி உடல் இயக்கம் முழுவதையும் மறுகட்டமைப்புச் செய்யுமாறு சொல்கிறது.  ஒருவேளை, உடல் புற்று நோய் மருத்துவமாகிய கீமொதெரபியாலோ அல்லது  வயதானதாலோ மிக மோசமான நிலையில் இருந்தால் உண்ணாநோன்பின் செயல் சுழற்சி புதிய  நோய் எதிர்ப்பாற்றல் இயக்கத்திறனை உருவாக்கும். என்று லாங்கோ குறிப்பிடுகிறார்.

தமிழாய்வுத் தடங்கள்,

முற்றிற்று.

 

நன்றி நண்பர்களே… மீண்டும் ஒரு தொடரில் சந்திப்போம்

புதன், 15 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் -41: நலவாழ்வு. மூளை வளர்ச்சியில் பூச்சிகளின் பங்களிப்பு .

 

தமிழாய்வுத் தடங்கள் -41: நலவாழ்வு.  மூளை வளர்ச்சியில் பூச்சிகளின்  பங்களிப்பு .


ஒரு புதிய ஆய்வின்படி  ஆதி மனிதன் உள்ளிட்ட விலங்கினங்களின் மூளை வளர்ச்சியிலும் உயர் அறிவுத்திறனிலும்   எறும்புகள், கூடில்லாத நத்தைகள், சிறிய பூச்சி வகைகள் ஆகியன தூண்டுகோலாக அமைந்துள்ளன.

வாசிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் அமண்டா  டி. மெலின் அவர்களின் ஆய்வுரையில்  மனிதன் உள்ளிட்ட உயிரினங்களின்  மூளையின் பரிணாம வளர்ச்சியிலும் அறிவுத்திறனிலும்  உணவு தலையாய இடத்தைப் பெற்றிருக்கிறது என்கிறார். இவ்வறிஞரின் ஆய்வுரையில்   வழக்கமான உணவு அரிதாகிப் போன காலத்தில்  பூச்சிகளைத் தோண்டியெடுத்து உண்டதால்  மனிதன் உள்ளிட்ட விலங்கினங்களும்  அறிவுத்திறனில் மேம்பட்டுப்  பூச்சிகளை இரையாக்க மனிதன் பல புதிய கருவிகளை உருவாக்கினான் என்கிறார் மெலின்.

மத்திய அமெரிக்கா நாடான கோசுடா ரிகாவில் வாழும் கம்புசின் குரங்குகளின்( இவ்வகைக் குரங்குகள் காட்டில் உணவு தேடுவதில்  மனிதர்களைப் போலவே கை,கால்களைப் பயன்படுத்தும் வல்லமை உடையவை ) வாழ்வியல் நடைமுறைகளை ஐந்து ஆண்டுகளாக ஆராய்ந்துள்ளனர். இவ்வாய்வு பரிணாம வளர்ச்சிக் கொள்கை ஒன்றைச் சார்ந்ததாகிறது . இது உணர்வுகளைக்கடத்தும் திறனை மேபடுத்தலோடு தொடர்புடையதாகிறது அஃதாவது,கைப்பாடுள்ள திறமை  மேலும் வளர்ந்து கருவிகளைக் கையாளுவதிலும் புதிய சிக்கல்களை தீர்ப்பதிலும் உணவுக்காகப் பூச்சிகளையும்  நிலத்தில் புதையுண்ட மற்ற உணவுகளையும் சேகரிக்கும்போது ஏற்படும் சிக்கல்களையும் தீர்க்க உதவுகிறது.

இவ்வாய்வு முதன்முதலாகப் பருவநிலை மாற்றங்களுக்கேற்ப கம்புசின் குரங்குகள் எவ்வாறு  செயல்பட்டு உணவுத்தேவையை நிறைவேற்றிக்கொள்கின்றன என்பதக்  கள ஆய்வின் வழி

  விரிவான சான்றுகளுடன் விளக்குகிறது.

இவ்வாய்வைக் கனடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கில்லாரி சி யங், கிருசுடின என் மாசுடசி, லிண்டா எம் பெடிகன்  கியோர் நிகழ்த்தியுள்ளனர். .      இதனால் மக்களினம்  பருவநிலை மாற்றங்களுக் கேற்பப் பூச்சிகள், புழுக்கள்,நண்டுகள், நத்தைகள் முதலியவற்றைத் தேடி உண்ணும் முறைகள் கம்புசின் குரங்குகள் கற்றுத்தந்த பாடங்களாகும். இவ்வாய்வு  உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியில், குறிப்பாக மூளை வளர்ச்சியில் (அறிதிறன் ) சிறப்பிடம் பெறுகிறது.

எட்டுத்தொகை:

“ கோடை நீடலின் வாடுபுலத் துக்கச்

சிறுபுல்லுணவு நெறிபட மறுகி

நுண்பல் எறும்பு கொண்டலைச் செறித்த

வித்தா வல்சி வீங்குசிலை மறவர் மாறோக்கத்து..

(அகநானூறு: 377.)

 மறவர்கள், தம் உணவினை விதைத்து விளைத்தலன்றிச் சிற்றெறும்புகள் அரிதின் முயன்று அளையிற் செறித்து வைத்தவற்றை அகழ்ந்து எடுத்து உண்ணும்  இயல்பினராவர்.

“செம்புற்று ஈயலின் அளை புளித்து…” (புறநானூறு: 126.)

செம்புற்றின் ஈசலை, இனிய மோரோடு கூட்டிச் சமைத்த புளிங்கறியை உடையது பாரி நாடு.

 

 

 

 


ஞாயிறு, 12 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் -40: நலவாழ்வு. பூண்டு உண்ணலாமா..?

 

தமிழாய்வுத் தடங்கள் -40: நலவாழ்வு. பூண்டு உண்ணலாமா..?



பூண்டு,  உடல் நலத்திற்கு மிகவும் நன்மை பயப்பதாக அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   வறுத்துப் பயன்படுத்துவது ஒரு சிறந்த சுவையூட்டியாக,  பலவகையான முறையில் சமைத்து உண்பதால் அது கூடுதலான எரியாற்றல் அளிப்பதில்லை .குறிப்பாக ஒரு கிராம்பில் (நான்கு கலோரி) உள்ளதைவிடக் குறைவாகவே பூண்டில் உள்ளது. பூண்டு வெறும் சுவையூட்டி மட்டுமன்று அது புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. மேலும் இதய நோய்களைத் தடுத்து, பாதுகாப்பளிக்கிறது. பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் காரப்பொருள் நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பளிக்கிறது . பூண்டு, தொற்றுநோய்க்  கிருமிகளை ஆற்றலுடன் எதிர்த்துப் போரிட்டு அழிக்கிறது. பூண்டு, தாழ்நிலை குருதிக் கொதிப்பையும் , பக்கவாத தாக்குதல் அறிகுறிகளையும் கட்டுப்படுத்துகிறது.

 

 நமது சித்தர் மருத்துவத்தில் பூண்டு மிகச் சிறந்த இடத்தைப் பெற்றுள்ளது. அன்றாடம் நமது வீட்டு அடுமனையில் அன்னையர் கைகளில் அரிய மருந்தாகப் பயன்பட்டு வருவதையும் காணலாம்.

 

சனி, 11 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் -39 : நலவாழ்வு : மரக்கறி (அ) புலால்…..?

 

தமிழாய்வுத் தடங்கள் -39 : நலவாழ்வு : மரக்கறி (அ) புலால்…..?





ஆத்திரேலியா மருத்துவப் பல்கலைக்கழகம் நிகழ்த்திய ஆய்வில் மரக்கறி உணவு உண்போர் புலால் உணவு உண்பவர்களைவிட உடல், மன நோய்களால் துன்புறுகின்றனர். மேலும் மரக்கறி உணவு உண்போர் குறைந்த அளவே மது அருந்தினால் உடல் நலத்தில்  குறிப்பிடத்தக்க முன்னேற்றமின்றி உடல்நலத்திலும் மனநலத்திலும் குறைந்தும் அவர்களே குறைந்த அளவே புலால் உண்டால் மருத்துவர்களைத் தேடிப்போவதில் நாட்டமின்றி நோய் தடுப்பு ஊசிகளை எடுத்துக்கொள்வதையும் தவிர்த்துவிடுகின்றனர்.

 ஆய்வாளர்கள் ஆய்வின் முடிவின்படி மரக்கறி உணவை எடுதுக்கொள்ளும் ஆத்திரேலியர்கள் உடல்நலக்குறைவுடன் வருந்தி வாழ்வதனால்  அவர்களுக்கு   அதிகப்படியான மருத்துவம் தேவைப்படுகிறது என்கின்றனர்.



வியாழன், 9 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் -38 : நலவாழ்வு.

 

தமிழாய்வுத் தடங்கள் -38 : நலவாழ்வு.


இலண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்களும் உலக மருத்துவ ஆய்வுக்குழுவும் இணைந்து  ஒரே ஒரு மாத்திரை பசிக்காத நிலையைத் தோற்றுவித்து உணவு உண்ணத் தேவையில்லாத  ஓர் அரிய அணுத்திரள் அஃதாவது பொருளின் பண்பு மாறுபடா மிகச்சிறிய நுண்கூறு ஆகிய மாலிக்குயுல் பசி எடுக்காத  மூலக்கூறு அதற்கு   அசெடேட்  என்னும் நேர் மின்னூட்டணு ஆகும்.  நாம் உணவில் உள்ள நார்ச்சத்து உண்டு செரிக்கும் பொழுது அசெடேட் மூளைக்குச் சமிக்ஞை அனுப்பி உணவு உண்ண வேண்டாமென்று கட்டளையிடுகிறது. ஆஃதாவது அசெடேட் உடலிலிருந்து வயிறு- கல்லீரல் – இதயம் – மூளைக்குச் சென்றடைந்து பசியைக் கட்டுப்படுத்திவிடுகிறது. கற்கால மனிதர்கள் 100 கிராம் அளவு நார்ச்சத்து கொண்ட உணவை உண்டனர். ஆனால் தற்காலத்தில் மிகக் குறைந்த அளவிலான நார்ச்சத்து உண்கிறோம்.  இவ்வாய்வில் அசெடேட் நார்ச்சத்து அதிக அளவில் கிடைக்கச் செய்வதால்  அதிகப்படியான உணவைத் தடுத்துவிடுகிறது. அளவுக்கு அதிகமான உடல் எடை கூடுவதையும் தடுக்கிறது.

நம் முன்னோர்கள் அதிக அளவிலான நார்ச்சத்து உணவுகளை உண்டு  பலநாள்கள் உணவு உண்ணாமல் இருந்திருக்கின்றனர்.

போகர் சித்தர்:

”தலைமைச் சித்தர், அங்கிருந்த மரங்களில் ஒன்றைக் காட்டி போகா! அந்த மரத்தின் பழங்களில் ஒன்றைச் சாப்பிட்டால் போதும் ஆயுள் முழுவதும் பசிக்காதுமுடி நரைக்காதுபார்வை மங்காதுஇவ்வளவு ஏன்எல்லோருக்கும் அச்சம் தரும் முதுமை என்பதும் வரவே வராது. தவம் செய்பவர்க்கு ஏற்ற துணை செய்யும்” என்றார். போகர் அந்தப் பழத்தைச் சாப்பிட்டார். பழத்தின் சுவையில் தன்னையும் மறந்தார்..”

தந்தை பெரியார்:

 அறிவியல் மேலைநாடுகளில் விரைந்து வளர்வதைச் சுட்டிக்காடி, இனிவருங்காலங்களில் ஆண் பெண் சேர்க்கையின்றி குழந்தை பிறக்கும் ; மணித ன் ஒரே ஒரு மாத்திரையைப் போட்டுக்கொண்டால் உணவு உண்ண வேண்டிய தேவை இல்லாமல் போகும் காலமும் வரும். என்றார்.

பெரியார் பல்லாண்டுகளுக்கு முன்னர் கூறிய இவ்விரண்டு  அறிவியல் சிந்தனைகளும் இன்று மெய்யாகின்றன.

 

புதன், 8 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் -37 : நலவாழ்வு.

 

தமிழாய்வுத் தடங்கள் -37 : நலவாழ்வு.


நளொன்றுக்கு 20 மணித்துளிகள் ஒக (யோகம்)ப் பயிற்சி, மூளையின் செயல்திறனை மேம்படுத்தலை உணரமுடியும்.

  20 மணித்துளிகள் ’கதா’ ஓகம் மூளையின் செயல்திறனைத் தூண்டிக் குறிப்பிடத்தக்க  புத்துணர்ச்சியை அஃதாவது  நினைவாற்றலை  விரைவாகவும் துல்லியமாகவும்  அளிப்பதோடு சோர்வையும் நீக்கிப் புத்துணர்ச்சி அளிப்பதை  சோதனைகள் வழி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஓகம்  உடற்பயிற்சி மட்டுமன்று; மூச்சுக் காற்றை ஒழுங்குபடுத்துவதோடு அமைதியான தியான நிலையையும் அளிக்கிறது. என்று’ நேகா கோதே’  கூறுகிறார். ஓகப் பயிற்சி அறிவாற்றல் திறனிலும்  உயிர்ப்பாற்றல் (மூச்சு )  மேம்பாட்டிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படுத்துவதாக அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன என்று கூறுகின்றனர்.

 

தொல்தமிழர் அறிவாற்றலில் விளைந்த அற்புத்ககலை, இக்கலை மிகவும் தொன்மையானது. சிவபெருமானை முதன்மைக் குருவாகக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்டது. உடற்கூறுகளை உய்த்துணர்ந்து இன்றைய அறிவியல் வியக்கும் வண்ணம் வாழ்வியலை வளப்படுத்தும் இக்கலைச்  சிந்துவெளித் தமிழரிடம் சிறந்தோங்கி இருந்தற்கான அகழாய்வுச் சான்றுகள் கிடைத்துள்ளன. ஓகம், ஆரியர் வருகைக்கு முன்பே தமிழ் நிலத்தில் நிலைபெற்றிருந்தது.

கோவிந்த் ராவத் எழுதியுள்ள யோகா நலவாழ்வு மந்திரம் என்னும் நூலில்  (Govind Rawat, Yoka : The Health Mantra.)

 

“ The History of Yoka may go back anywhere from five ti eight  thousand years , depending on the perspective  of  the historians. It evolved wholly in the land of India and while it is supposed by some scholars that yogic practices were originally  the domain of the indigenous , nob – Aryan (and pre – vedic) peoples, it was first clearly expounded in the great vedic shastras (Religious texts) – (P.30.)”

 

வேத காலத்திற்கு முன்பே யோகக் கலை சிந்து வெளியில் செழிந்திருந்தது என்பதற்கு ஓர் அரிய முத்திரை கிடைத்துள்ளது. அம்முத்திரையில் யோக நிலையில் அமர்ந்திருக்கும் ஓர் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

 

“Pre-vedic findings are taken, by some  commentators , to show that ‘yoka’ existed in some form well before the establishment  or Aryan culture in the north Indian subcontinent.

A triangular amulet seal uncovered at the Mohenjo – daro archaeological excavation site depicts  a male, seated on a low platform in a cross- legged  position , with arms outstretched . (P.30.) “

செவ்வாய், 7 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் – 35: கல் – சிலை – கருவறை - கடவுள் – கடத்தல்.

 

தமிழாய்வுத் தடங்கள் – 35: கல்சிலைகருவறை - கடவுள் 

கடத்தல்.


சட்டவிரோதமாக பழங்காலக்  கோவில்களை இடிப்பதால் கோவில்களில் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் உடைய தூண்களையும் சுவர்களையும் தேர்களையும்  திருடுவதற்குத்  திருடர்களுக்கு எளிதாகிறது.

மதிப்புமிக்க தொல்பொருள்களக் கொள்ளை அடிக்கும் கடத்தல்காரார்களின் தாரகமந்திரம்; ‘ கோவில்களை இடித்துத் தரைமட்டமாக்கு ;தங்கக் கட்டிகளைத்தைத் தட்டித்தூக்கு, என்பதாகும்.

படத்தில் உள்ளவை : இடிக்கப்பட்ட தஞ்சாவூர் நாகநாதசாமி  கோவில் வளாகத்தில் கவனிப்பின்றிக் கிடக்கும்  சிலைகள்.

இடைக்காலக் கோவில் வளாகத்தில் இடுபாடுகளில்  சிறந்த வேலைப்பாடுகள் கொண்ட தூண்களும் சுவர்களும் தேர்களும் வாகனங்களும் கடத்தல்காரர்கள் கடத்திச் செல்வதற்கு எளிதாகச் சிதறிக்கிடக்கின்றன..

ஆயிரம் ஆண்டுகள பழமையான, இராசேந்திரச்சோழன் கால நாகநாதசாமி கோவில் இது, தஞ்சாவூர் கும்பகோணம் அருகில் உள்ள மானம்பாடிஎன்னும் ஊரில் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது, அலங்கோலமாகக் கிடக்கிறது.

 இந்திய நெடுஞ்சலைத்துறையினரால் கோவில் அகற்றப்படும் என்றபோது தமிழ்நாட்டரசு கோவிலைக் காப்பாற்றியது. ஆயினும் 2016 இல் கோவில் இடிக்கப்பட்டது. அதன்பின் ஆறுமாதங்கள் கழித்து,  அரசு பழங்கால  நினைவுச்சின்னமாக அறிவித்தது.

கி.பி. 11ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த அச்சியுத தேவ ராய விசயநகரப்பேரரசு கட்டிய கோவில் தூண்களில் செதுக்கப்பட்டசில சிற்பங்கள் தமிழ்நாட்டில் சமணக் கோவில்களில் சிதைக்கப்பட்டவைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக் காவலர்கள் சிலை கடத்தல் மன்னன் தீனதயாளிடமிருந்து மீட்டு அவை சென்னை அருங்காட்சியக வளாகத்தில் உள்ளன.

 மேற்குறித்துள்ள செய்திகள் மிகவிரிவாகச் செய்தித்தாளில் இடம்பெற்றுள்ளன.




ஞாயிறு, 5 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் – 35: சமணர்கள் எழுதிய அரிய ஓலைச்சுவடிகள் அழியும் நிலையில்…..!

 

தமிழாய்வுத் தடங்கள் – 35: சமணர்கள் எழுதிய அரிய ஓலைச்சுவடிகள் அழியும் நிலையில்…..!


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஆதீஸ்வர் சமணக் கோவிலில் அரிய ஓலைச் சுவடிகளைப் பாதுகாப்பதற்குப் போதிய வசதியின்றி அவை அழியும் நிலையில் உள்ளன. பழமைவாய்ந்த சமண இலக்கியங்களாகிய ‘ஆதிபுராணா’, ’பதார்த்தசாரம்’ ஆகிய நூல்கள் துணியில் சுற்றப்பட்டுச் சிறிய நூலகத்தின் சிமிண்டு பலகையில் வைக்கப்பட்டுள்ளன. சுமார் 50 சுவடிகளுள் 35 அழியும் நிலையில் உள்ளன. சுவடிகள் கி.பி. முதல் நூற்றாண்டிற்கும் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவையாகும்.  இவை பழங்கால மூலநூல்களின் படிகளாகும்.இவை சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவையாகும். ஆரணி ,  இந்திய சமண அறிஞர்கள் கூடும் இடமாக இருந்தது. பழங்கால நூல்களைப் படியெடுத்தவர்கள் யாரென்று அறிய முடியவில்லை என்கிறார். சமண அறிஞர் கே. அஜிதா தாஸ்.மேலும் சுவடிகள் தற்பொழுது வைக்கப்பட்டிருக்கும் இடம் பாடுகாப்பானதாக இல்லை , அவை ஈரப்பதம் அடைந்து அழிந்துவிடும் எனவே புதிய இடம் ஒன்றினை ஏற்படுத்திப் பாதுகாக்க வேண்டும் என்றார்.

 ஆதிபுராணா, ரத்னகரன்தாஸ்ரவகசார், பதார்த்த சாரம், மீர்மந்தரபுரம், சமயசார, தத்வசூர்த்ரா இவை மூல்நூல்களின் படிகளாகும். இவை பிராக்ரித், சமற்கிருதம், தமிழ்  ஆகிய மூன்று மொழிகளில் உள்ளன. இவற்றுள்  சில சுவடிகளை மீட்டெடுக்க இயலாது எஞ்சியவற்றை மீட்டெடுக்கலாம் என்கிறார் சென்னையைச் சேர்ந்த  சுவடி வல்லுநர் கே. கிருட்டினகுமார் மேலும் அவர்,சுவடிகளை உடனடியாக மின்னணுப்பதிப்பாக்கினால்  அவற்றைக்காப்பாற்றலாம் என்றார்..

சனி, 4 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் – 34.முன்னோர் கடல்வழியில் சோழர்களின் வெற்றிப் பயணம்.

 

தமிழாய்வுத் தடங்கள் – 34.முன்னோர் கடல்வழியில் சோழர்களின் வெற்றிப் பயணம்.


சோழர் கப்பல்கள் தென்கிழக்காசிய நாடுகள் மீது படையெடுக்கவும் வணிகத் தொடர்புகளுக்கும் கப்பல்களைக் கிழக்குக் கடற்கரையில் நிறுத்துவது சாலச் சிறந்தது என்று கருதினர்.

கி.பி. 11ஆம் நூற்றாண்டில்  இலங்கை மீது படையெடுத்து அந்நாட்டை இராசராச சோழன் கைப்பற்றினார். இப்படையெடுப்புத்  தொடர்ந்து மேலும் பல நாடுகளைக் கைப்பற்ற வழிவகுத்தது. இந்தோனீசியா, மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளை வென்று வாகைசூடினார் இராசராசன்.

பிற்காலச் சோழப் பேரரசர்கள் கடல் கடந்த நாடுகளை வெல்வதற்கு முன்னோர்கள் கண்டறிந்த கடல்வழித் தடங்கள் பேருதவி புரிந்தன.கி.பி. 850 – 1279 வரை கிழக்குக் கடற்கரை, கப்பல் போக்குவரத்துக்குப் பொருத்தமான இடமாக அமைந்திருந்தது. தஞ்சாவூரும் கங்கைகொண்டசோழபுரமும் சோழர்களின் தலைநகரமாக விளங்கியதால் நாகப்பட்டினம் துறைமுகம் நாட்டின் பாதுகாப்பிற்கும் வணிகத்திற்கும் சிறந்த இடமாகத் தேர்வு செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது.

மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில்தான் கம்போடியா, இந்தோனீசியா, மியான்மர், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர், வியட்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளை வென்றெடுக்க முடிந்தது.

சோழப் பேரரசின் இராசராசன், இராசேந்திர சோழன்,  குலோத்துங்கன் ஆகியோர் கிழக்காசிய நாடுகளை வெல்லத் துணிந்து பயணித்தனர்.

 சோழர்கள்  16 நாடுகளைப் போரிட்டு வென்றனர் என்னும் செய்தி தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

உலகின் பல்வேறு நாடுகளுடன் தமிழர்கள் வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர்  என்னும் அரிய வரலார்றுச் செய்திகளை2000, ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியங்களான பட்டினப்பாலையும்  புறநானூறும் எடுத்துரைக்கின்றன.

மேலும் விவான செய்திகளைக் கட்டுரையில் காண்க.

 

வெள்ளி, 3 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் – 33:சங்கத்தமிழரின் கடல்வழி வாணிகம்.

 

தமிழாய்வுத் தடங்கள் – 33:சங்கத்தமிழரின் கடல்வழி வாணிகம்.



 

தொல்தமிழர்கள் (மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன்) ரோமன், எகிப்து,சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகியவற்றோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். தொல்பழங்காலத் தமிழ்நாட்டுத் துறைமுகங்கள் தமிழகத்திலிருந்து அயல்நாடுகளில் அரிய பொருள்களான மிளகு, ஏலம், முத்து, சங்கு வளையல்கள், உப்பு, மீன்கள், முதலியவற்றை  பெரிய கப்பல்களில் ஏற்றுமதி செய்து அவற்றிற்கு மாற்றாகப் பொன், குதிரை, விலை உயர்ந்த கற்கள் முதலியவற்றை இறக்குமதி செய்துகொண்டனர்.

சங்க இலக்கியச் சான்றுகள்..

கலங்கரை விளக்கம் – அகநானூறு :255.

பொற்குவியல் – மேலது – 258.

பொன் சுமந்த கலம் –  மேலது – 149.

தொல்தமிழர் வானியல் அறிவு – பரிபாடல் : 19.

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் – பதிற்றுப்பத்து – 44.

காலக்கணக்கர்- குறுந்தொகை : 261.

நாழிகை கணக்கர் – முல்லைப்பாட்டு : 55- 58.

கொற்கைத் தலைவன் –மதுரைக்காஞ்சி : 134 -138.

கடல் வாணிகம் -  மேலது : 315 – 326.

கடல் வாணிகம்- மேலது :  75 -88.

கடல் வானிகம் சுங்கவரி – பட்டினப்பாலை : 128 – 135.

கடல் வாணிகம்- புகார் துறைமுகம் : மேலது : 184 – 193.

பண்டங்கள் பகர்நர் –மேலது : 500 – 506.

காவிரியாறு. பட்டினப்பாலை : 1 – 7.

பெரிய துறைமுகங்கள் :

1.   கொற்கை,2. காவிப்பூம்பட்டினம், 3. மாமல்லபுரம்.

சங்ககாலத் துறைமுகங்கள்: 16.

1.   மாமல்லபுரம், 2. மைலாப்பூர், 3. கோவலம், 4.சதுரங்கப்பட்டினம். 5. குலசேகரப்பட்டினம், 6.வீரபாண்டியன் பட்டினம். 7.இருக்கந்துறை. 8. அரிக்கமேடு. 9. முசிறி, 10.நாகப்பட்டினம், 11. தொண்டி, 12.வீரைமுன்துறை,13. அழகன்குளம், 14பெரியபட்டினம், 15. கொற்கை, 16.காயல்பட்டினம்.

துறைமுகங்கள் ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களிலேயே  அமைந்திருந்தன. கப்பல் கட்டுவதிலும், பழுது நீக்குவதிலும் அறிவியல் அறிவுடன் கப்பல்களைச் செலுத்துவதிலும் சிறந்து விளங்கினர். பிற்காலத்தில் சோழ மன்னர்கள் பெரும்படையுடன் கடல் கடந்து பல நாடுளை வென்றெடுக்க முன்னோர்கள் காட்டிய கடல்வழி உதவியாக அமைந்திருந்தது.

மேலும் தொல்தமிழர்களின் கடல் வாணிகம் தொடர்பான இலக்கியங்கள்  வரலாற்றுக்குறிப்புகள், கல்வெட்டுகள், நாணயங்கள், அகழாய்வுகள் கலைப் பொருள்கள்  இன்னபிற சான்றுகள் வழி அறியமுடிகிறது.

வியாழன், 2 மே, 2024

தமிழாய்வுத் தடங்கள் – 32:சோழப் பேரரசின் அரசியல் மேலாண்மை.

 

தமிழாய்வுத் தடங்கள் – 32:சோழப் பேரரசின் அரசியல் மேலாண்மை.



அரசியல் ஆய்வுநூல்களில் சோழர்களின் அரசியல் நிருவாக மேலாண்மை அதிகார ஆணைகள்  தெளிவாக எடுத்துரைக்கப்படவில்லை என்கிறார், சிகாகோ பல்கலைக் கழகப் பேராசிரியர் விட்னி காக்சு.

1070இல்  ஆட்சி செய்த சோழ அரசர்களின் அரசியல்,  சமுக செயற்பாடுகள்  கல்வெட்டுகளில் விரித்துரைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான கல்வெட்டுகள், கங்கைகொண்ட சோழபுரம், தாரசுரம், தஞ்சாவூர் ஆகிய  கோவில்களில் இடம்பெற்றுள்ளன.சுமார் 19 ஆவணங்களைக்    குலோத்துங்கன் ஆதிராசேந்திரன் பெயரில் வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் 16 ஆவணங்கள் கி.பி.1070 -1071 இல் வெளியிடப்பட்டுள்ளன.

ஆவணங்கள் குலோத்துங்கன் உறவினரான ராசேந்திரன் பெயரில் அவனது கி.பி. (1071 – 1072) இரண்டாம்  பெயரில் இரண்டாம் ஆட்சியாண்டில் வெளியிட்டும் தொடர்ந்து மே,  1074 ஆம் ஆண்டில் முதல் ஆவணம் அவனுடைய புதிய பெயரான குலோத்துங்கன் பெயர்  தெரிகிறது.

இராசராசன் ஆட்சிக்காலத்தில்ஆவணங்கள்  வருவாய்த்துறையின் கீழ்  நாடு பல வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டது .

கோவில் சுவர்களின் மாடங்களில் அமைந்துள்ள  சிறு உருவச்சிலைகள் வழியே (தாராசுரத்தில் பெரியபுராணம், பிரகதீசுவரர் கோவில் கங்கைகொண்டசோழபுரத்திலும்)  அரிய கருத்துகள் விரித்துரைக்கப்பட்டுள்ளன.

பேராசிரியர் காக்சு செய்தியாளரின் வினாக்களுக்கு விடையளித்துள்ளார். அவர் தன்னைப்பற்றிக்கூறும்பொழுது, “ நான் தொல்லியல் ஆய்வாளனோ, களப்பணியாளரோ அல்ல; ஆய்வுரைகளின் ஆய்வாளன், என்றார்.