சனி, 24 ஜனவரி, 2026

தமிழமுது –189– தொல்தமிழர் இசை மரபு:49......1. நற்றிணை.

 தமிழமுது –189– தொல்தமிழர் இசை மரபு:49  

 1.  நற்றிணை. 

 தொல்தமிழரின் இசை மரபு தொடர்ந்துவரும் பாங்கினைக் கலித்தொகையிலும் பரிபாட்டிலும் கண்டோம்இனி எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ள எஞ்சிய ஆறு நூல்களை நோக்குவோம். 

           

 இசைகேட்டு மகிழும்        ஐந்தறிவுடைய உயிரினங்கள்.  

ஓந்தி மகிழ்ந்ததாக ஒரு பாடல் 

“ கானம் வெம்பிய வறங்கூர்கடத்திடை  

வேனில் ஓதி நிறம்பெயர் முது போத்து 

ாண்யாழ் கடைய வாங்கி பாங்கர்  

நெடுநிலை யாஅம் ஏறும் தொழில -” 186 : 4-7.  

 

ச்சமுடைய காட்டு வழியில் வேனிற்காலத்தில்  மாறி மாறித் தன் நிறம் வேறுபடுகின்ற ஓந்திப்போத்து யாமரத்தில் ஏற இயலாது வருந்தும்அவ்வழிச் செல்லும் பாணர் தம் வருத்தம் தீரச் சிறிது பொழுது யாழ் இசைக்க அவ்விசையைக் கேட்டு ஓந்தி தன் வருத்தம் தீர்ந்து அந்த யாமரத்தின் மீது ஏறும்என்று  யாழிசையின் இனிமையை விதந்தோதுவார் புலவர்.  

 

2.  கணந்துள் பறவையின் இசையறிவு. ;  

 

 பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ  

நெடுங்கால் கணந்துள் அம்புலம்புகொள் தெள்விளி 

சுரம்செல் கோடியர் கதுமென இசைக்கும்  

நரம்பொடு கொள்ளூம் ...” குடவாயிற் கீரத்தனார் . 212. 1-4. 

 

ேடன் வலை விரித்தனன்அந்த வலையைக் கண்ட நெடிய காலை உடைய கணந்துள் பறவை அச்சமுற்றுக் கத்தும் ;  தனித்துக் குரல் எழுப்பும் பறவையின் தெளிந்த ஓசை பாலை நில வழியில் செல்லும் கூத்தர்வழிச்செல்லும் வருத்தம் நீங்கத் திடீரென இசைக்கும் யாழிசையுடன் சேர்ந்து ஒத்து இசைக்கும் 

கணந்துள் பறவை ஆள் வருகையை அறிவிக்கும் ஆட்காட்டிப் பறவை என்பர்.) 

.............................................தொடரும்.................................. 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக