தமிழமுது –259– தொல்தமிழர் இசை மரபு:119 நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு வீழ்ச்சி:
சிவன் வழிபாடு வட இந்தியாவைவிட தென்னாட்டில்தான் மக்களிடம் முதன்மை பெற்றுள்ளது.தென்னாட்டுத் திராவிடமக்கள் ஆரியர்களுக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே அங்கு நிலைபெற்று இருந்தமையை இது காட்டுவதகும். தாய்த்தெய்வ வழிபாடும் தென்னாட்டிதான் மிகுந்து காணப்படுகிறது.
தமிழர் நடனமும் தமிழிசையும் இன்று கருநாடக இசை, பரதநாட்டியம் என்ற பெயரில் வழங்கிவருகின்றன. பாணர் தமிழரிடையே தொன்றுதொட்டு இருந்துவருபவர் ; சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் இருந்தவர் எனவே பண் அடிப்படையில் அமைந்த தென்னிந்தியத் தொன்மை இசை வடவைடமிருந்து கடன் பெற்றதாக இருக்க இயலவே இயலாது.” பண் என்னும் சொல்லிலிருந்து பாணன் என்னும் சொல் தோன்றியது. மாறாகப் பிற்கால இந்திய இசையின் ராகங்கள் ( அவை பண்களீன் உருமாற்றங்களோ) தென்னிந்தியத் தொல் இசையிலிருந்து உருவாயின என்பதே சரி. - ஜி.எல். ஹார்ட். இசையறிவை ஆரியரல்லாதவர்களிடமிருந்து ஆரியர் கடன் பெற்றதை மறைப்பதற்காகவே சாம வேதத்திலிருந்து இந்திய இசை பிறந்தது என அவர்கள் கதை புனைந்தனர். - ஓ. கோஸ்வாமி.
களப்பிரர் காலம்: இருண்ட காலம்....?
களப்பிரர் காலத்தில் சமணமும் பெளத்தமும் அரசின் ஆதரவோடு வளர்ந்திருக்க வேண்டும். எனவே கி.பி.ஆறாம் நூற்றாண்டில் இவ்விரு சமயங்களை ஒழிக்க ஞானசம்பந்தர், நாவுக்கரசர் போன்றோர் பல கொடுமைகளைச் செய்ய வேண்டியதாயிற்று. களப்பிரர் கன்னடர் ஆகையால் அவர்கள் தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் ஆதரவு அளித்ததாகத் தெரியவில்லை ; எனினும் அவர்கள் ஆட்சிக்காலத்திலும் தமிழர் மொழியையும் இலக்கியத்தையும் நல்ல முறையில் வளர்த்தார்கள் என்று மயிலை சீனி வேங்கடசாமி கருதுகிறார். அக்காலத்தில் எழுந்த முதன்மையான தமிழ் நூல்கள் என் அவர் கூறுவது, பதினெண்கீழ்க்கனக்கு நூல்களில் 14, நாலடியார்,அவிநயம், காக்கை பாடினியம், சீவகசிந்தாமணி பெருங்கதை காரைக்காலம்மையார் நூல்கள். “பார்ப்பனர் தமது மேம்பாட்டை இழந்தனர் என்பதால்தான் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் என்று சொல்கின்றனர் என்பார் மு.ரா. பெருமாள் முதலியார்.
களப்பிரர் காலத்தில் தமிழ் மொழியும் இலக்கியமும் தாக்குண்டன, பின்னர் கி.பி. 6ஆம் நுற்றாண்டில் சைவ சமயத்தின் கை ஓங்கிய பின்னரே தமிழ் பழைய நிலையைப் பெற்றது என்பர். ...........................தொடரும்.........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக