தமிழமுது –278– தொல்தமிழர் இசை மரபு:138. நீட்சியும் - வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்)
இசைமரபு - எழுச்சி: பண்சுமந்த பாடல்கள்.
உலகம் போற்றும்- திருவாசகம்:
தமிழில் உள்ள பக்தி நூல்களில் (ஏன் உலக மொழிகள் அனைத்திலும் உல்ளவற்றிலேயே) மிகச் சிறந்தது கி.பி.9ஆம் நூற்றாண்டில் மானிக்கவாசகர் எழுதிய திருவாசகம் ஆகும். அதனை 1900 இல் ஆங்கில ஆக்கம் செய்த ஜி.யூ.போப் “ஆங்கிலத்தில் (Pilgrim’s prugress .) நூலுக்கு ஒப்பானது திருவாசகம் ; பக்தியும் தெய்வீக உணர்வும் கொண்ட ஞானியின் அனுபவத்தில் மலர்ந்தது” என்று பாராட்டியுள்ளார்.
ஆன்மிகத்தையும் பக்தியையும் “தத்துவஞானிகள் குழாமிடமிருந்து” பொதுமக்களிடம் கொண்டு சென்றது திருவாசகம். உபநிஷத்துகள் ‘வாழும் வழி’ ( a way oflife.) என்பர் இராதாகிருஷ்ணன். திருவாசக் ஆங்கில மொழி பெயர்ப்பாளருள் ஒருவரான ஜி. வன்மீகநாதன் “மாந்த வாழ்வே திருவாசகம்தான் “ (.Thiruvasagam is the life itself.) என்பார். தமிழ் “அன்பு” சமஸ்கிருத (Priyah.) என்பதைவிட நயமான சொல். பகவத்கீதை 12,14 – 20 (.same priyah – he is dear to me, who.”.) என்பதுதான் சரியான ஆங்கில ஆக்கம். ஆயினும் (.Zaehner.) முதலியவர்கள் ‘( I love the manwho.) என மொழிபெயர்த்துள்ளார். மாந்தனுக்கும் கடவுளுக்கும் இடையிலுள்ள உறவைக் குறிக்கும் “அன்பு” போன்ற அருமையான சொல் கீதையில் இல்லை என்பார் ஏ.கே. இராமானுசன் (.Hymns for the drowning 1981.)
சங்க இலக்கிய இறுதிக் காலத்திலேயே பக்திப் பாடல்களும் தோன்றிவிட்டன. (பரிபாடல்,திருமுருகாற்றுப்படை) பக்தி இயக்கம் ஓரளவுக்கு மனிதம் சார்ந்ததாகவும் கீழ்ச் சாதியினருட்பட அனைவரிடமும் பொதுமையையும் ஒற்றுமையையும் வளர்ப்பதாக அமைந்தது. உலக மொழிகளின் பக்தி இலக்கியங்கள் அனைத்திலும் கி.பி. 400 –900. சார்ந்த தமிழ் பக்தி இலக்கியங்கள் தனிச் சிறப்பு வாய்ந்தவை என்பதையும் நல்லறிஞர்கள் ஏற்றுள்ளனர்.--பி. இராமநாதன்.
......................தொடரும்......................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக