புதன், 1 ஏப்ரல், 2026

தமிழமுது –252– தொல்தமிழர் இசை மரபு:112 ..மொழிஞாயிறு பாவாணர் ஆய்வுரை - 9.

 தமிழமுது –252– தொல்தமிழர் இசை மரபு:112 நீட்சியும் -  வீழ்ச்சியும். ஆடல் + பாடல் = கூத்து (நாடகம்) 

                              மொழிஞாயிறு பாவாணர் ஆய்வுரை - 9. 

  •                                                                                     நாடகம் என்பது கதை தழுவிவரும் கூத்து  . அது பொருள், கதை (யோனி), தலைமை, (விருத்தி) நிலை (சந்தி), சுவை, வகுப்பு (சாதி), குறிப்பு, விறல் (சத்துவம்) நளிநயம் (அபிநயம்), சொல், சொல்வகை, வண்ண,, வரி, சேதம் என்னும் 14 உறுப்புகளையுடையது.  

  •     நாடக அரங்கு நல்ல கெட்டி நிலத்தில், ஈரடி நீளமுள்ள கோலால், எண்கோல் நீளமும் எழுகோல் அகலமும் ஒரு கோல் உயரமும் உள்ளதாக அமைக்கப்பட்டு, மேலே முகடும், ஒரு முகவெழினி பொருமுக வெழினி கரந்துவரல் எழினி என்னும் மூவகைத் திரைகளும், புகுவாயில் புறப்படுவாயில் (Exit)   என்னும் இரு வாயில்களும் உடையதாயிருந்தது.  

 

                   தமிழக நாடகமெல்லாம் இசைப்பாட்டுல்ளவையே (operas) நாடகம் என்பது நாட்டக்க என்றும் அரங்கு அரங்கம் என்பன ரங்க என்றும் வடமொழியில் திரியும். இசை, நாடகம் என்பவற்றின் விரிவை என் ‘முத்தமிழ்’ என்னும் நூலிற் கண்டு கொள்க. 

................................தொடரும் ..........................................   

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக