ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-18.
தொல்காப்பியர் வரலாறு :
தொல்காப்பியர்-காலம் :
புலவர் வெற்றியழகன் தொல்காப்பியர் காலம் குறித்துக் கூறியவற்றைக் காண்போம்.
”தொல்காப்பியரின் காலத்தைப் பல்வேறூ அறிஞரும் பல்வேறு காலனகளைப் பல்வேறு வகையினிற் கூறியுள்ளனர். தொல்காப்பியத்தை இயற்றியவர் அகத்தியரே என்றும்; அந்த அகத்தியரே தொல்காப்பியர் என வழங்கினர் எனவும் ; தொல்காப்பியர் காலம் கி.மு ஏழாயிரம் எப்படியும் ஏறக்குறைய10,676 ஆம் ஆண்டில் தொல்காப்பியம் தோன்றியிருக்க வேண்டும் என்று பொள்ளாச்சி நா. மகாலிங்கம் கூறுகின்றார்.
பேராசிரியர் மு. இராமலிங்கம் பகீரதன் ஆகிய இருவரும் பொள்ளாச்சி மகாலிங்கம் காலத்தைக் கொண்டவரே.
கி.மு. மூவாயிரம் ஆண்டு என்று தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளாரும் ; வெள்ளைவாரணனார் கி.மு. அய்யாயிரம் என்றும் ; கி.மு. மூவாயிரம் என்று பா.வே. மாணிக்க நாயக்கர் என்றும் ; காசு பிள்ளை கி.மு. இரண்டாயிரம் என்றும் ; நாவலர் சோமசுந்தர பாரதியார் கி.மு. ஓர் ஆயிரம் என்றும் என்றும் ; தேவநேயப் பாவாணர் கி.மு. ஏழாம் நூற்றாண்டு என்றும் ; வி.ஆர்.ஆர். தீட்சிதர் கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டு என்றும் ; எம். சீனிவாச அய்யங்கார் நான்காம் நூற்றாண்டு என்றும் ; பி.டி. சீனிவாச அய்யங்கார்கி.பி. முதலிரண்டாம் நூற்றாண்டு என்றும் ; பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை கி.பி. நான்காம் அல்லது அய்ந்தாம் நூற்றாண்டு என்றும் ; ஒவ்வொருவரும் ஒவ்வோர் ஆண்டைக் குறிப்பிட்டாலும்,
வெள்ளைவாரணனார் கூறும் கி.மு. அய்யாயிரம் ஆண்டை ஏற்றுக்கொண்டு இன்று ஏறக்குறைய ஏழாயிரம் ஆண்டுகள் என்பதனை உறுதி செய்யலாம்.என்கிறார் புலவர் வெற்றியழகன்.
......................................தொடரும்......................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக