ஞாயிறு, 14 ஜூன், 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-9. நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்.

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-9.  

               தொல்காப்பியர் வரலாறு : பாயிரம் - மறுப்புரை: 

               நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார். 

நற்றா டொழா அரெனின் என்றதாவது 

 கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்    

நற்றாள் தொழாஅர் எனின். (குறள்.2.)  

ஒரு குறட்பாவின் பின்னடியை வடமொழியில் எழுதுதல் சாலுமோ ? இதன் முதலிலுள்ள ‘ந’ என்னும் ஒன்றன்றி மற்றைய எழுத்துக்கள் எழுதப்படாவாயின் வடமொழியன்றோ பெரிதும் எழுத்துக்குறைபாடுடையதென இது காட்டி நிற்கும். இப்பொழுது ஐந்தெழுத்து எத்துணௌப் பெருமையுடையன வென்பது காண்க. 

                                           ஆய்வுரை:

ல்காப்பியர் சமதக்கினி மைந்தரென்பதும் அகத்தியர் மாணாக்கரென்பதும் பொருந்துமா என்னும் ஆராய்ச்சி.  

அறிவு சான்ற ஆன்றோர்களே..! இவ்வாராய்ச்சியுரைக்குப் பொருளாகவுள்ள தொல்காப்பியத்தில்  

அவையடக்கிலே அரிவறத் தெரியின்    

வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மினென்    

றெல்லா மாந்தர்க்கும் வழிமொழிந் தன்றே.”  

                 என அவையடக்கத்திற்கு இலக்கணம் கூறப்பட்டிருத்தலின், யானும் அம்முறை பற்றி என் உரைகளிலுள்ள குறைகளை நுங்கள் சீரிய  மதியாற் செப்பஞ் செய்து கொள்கவென வேண்டி, எனது ஆராய்ச்சியைத் தொடங்குகின்றேன். இப்பொழுது நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்கள் எல்லாவற்றுள்ளும் காலத்தால் முந்தியும், தமிழில் அனைத்தையும் முற்றவெடுத்துக் கூறுவதும் தொல்காப்பியமே என்பது தமிழ் வல்லார் அனைவர்க்கும் ஒப்ப முடிந்த கருத்தாகும்.  இந்நூலினை நன்கு ஆராய்தலானே தமிழ் மொழியின் இயல்புகளையும் தமிழகத்தின் பழைய நிலைமைகளையும் ஒருவாறு காண்டல் கூடுமென்பதில் ஐயமில்லை. யான் இவ்வாராய்ச்சியை நடாத்துழிப் பண்டை நூல், உரையாசிரியன்மார் கொண்ட கொள்கைளுக்கு  ஒரோவழி மாறாகச் சொல்லுதலுங் கூடும் அன்றி, இதுகாறும் யான் கொண்டிருந்த கருத்துக்கு முரணாகவும் சில இருத்தல் கூடும். ஆராய்ச்சியின் பெற்றி இதுவெனவறிந்த அறிவுடையார் இவை குறித்து என்னை முனியாரென்னும் துணிவுடையேன் 

இந்நூலின் ஆசிரியராகிய தொல்காப்பியர் சமதக்கினி முனிவருக்கு மைந்தர் என்றும், அகத்தியனார்க்கு மாணாக்கர் என்றும் கூறப்படுகின்றனர். இவற்றுள் முன்னையதற்கு ஆதரவு, உரையாசிரிய ரெல்லாருள்ளும் பின் வந்தவராகிய ஆசிரியர் நச்சினார்க்கினியர், 

 தொல்காப்பியப் பாயிரவுரையில்  “தேவரெல்லாங்கூடி யாம் சேரவிருத்தலின் மேருந்தாழ்ந்து தென்றிசையுயர்ந்தது இதற்கு அகத்தியனாரே ஆண்டிருத்தற் குரியரென்ற அவரை வேண்டிக் கொள்ள, அவரும்  தென்றிசைக்கண் போதுகின்றவர் கங்கையாருழைச் சென்று அவர் மகனார் திரணதூமாக்கியாரை வாங்கிக்கொண்டு, புலத்தியனாருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியர் உலோபாமுத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து... பொதியலின்கண்ணியிருந்து. இராவணனைக் கந்தருத்தாற் பிணித்து, இரக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கி, திரணதூமாக்கினியாராகிய தொல்காப்பியனாரை நோக்கிநீ சென்று குமரியரைக் கொண்டு வருக’எனக்கூறினார் என உரைத்திருக்கும் கதையன்றி வேறில்லை. ...............................................................தொடரும்...................... 

 

2 கருத்துகள்:

  1. Top Forex Brokers in India offer traders a secure and efficient way to access the global currency markets while complying with local regulations. The best brokers are known for their reliable trading platforms, competitive spreads, fast order execution, and comprehensive educational resources. They provide advanced charting tools, market analysis, and responsive customer support to help traders make informed decisions. Whether you are a beginner exploring forex trading or an experienced investor seeking advanced features, choosing a reputable forex broker in India can enhance your trading experience, improve risk management, and provide access to a wide range of market opportunities. Always consider factors such as regulation, platform performance, fees, and customer service when selecting a forex broker.

    பதிலளிநீக்கு
  2. Online Forex Trading in India has become increasingly popular among investors and traders seeking opportunities in the global currency market. With advanced trading platforms, real-time market data, and easy access through desktop and mobile devices, traders can buy and sell currency pairs conveniently from anywhere. Online forex trading offers valuable tools such as technical analysis, charting features, risk management options, and educational resources to help traders make informed decisions. Whether you are new to trading or have years of experience, online forex trading provides a flexible and efficient way to participate in the financial markets. Success in forex trading depends on market knowledge, disciplined strategies, and proper risk management, making it essential to choose a reliable platform and continue learning as market conditions evolve.

    பதிலளிநீக்கு