சனி, 27 ஜூன், 2026

ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-20. அறிஞர் சி. கணேசையர்

 ஒல்காப் பெரும்புகழ் தொல்காப்பியம்:-20.  

               தொல்காப்பியர் வரலாறு 

                     தொல்காப்பியர்-காலம் : அறிஞர் சி. கணேசையர்

                          ஐந்திர முணர்ந்த தொல்காப்பியன் எனத் தொல்காப்பியப் பாயிரங் கூறலின், வியாகரண காலத்தை அடுத்தே தொல்காப்பியஞ் ெய்திருக்க வேண்டுமென்பர். வியாகரண காலமென்று அவர் கருதுங்காலம் பாணினி வியாகரணமும் அதனுரைகளுமெழுந்து பிரசித்திபெற்ற காலத்தையே குறிக்குமன்றி ஐந்திர வியாகரண காலத்தை குறியாது. ஐந்திர வியாகரணத்தை இராமன் காலத்திருந்த அனுமன் சூரியனிடம் கேட்டறிந்தானென்று இராமாயணம் கூறுதலின் ஐந்திர வியாகரணம் மிகப்பழைமையுற்றது என்பது அறியப்படும். 

 “வேதமொரு நாலுடன் விளங்கிய    

                சடங்கமும் விரிந்தகலையும்    

ஓதநிலை வீதிமிசை ேழுபரி    

                    பூணருண னூரவிரை தேர்    

மீதுசெலும் வெங்கதிர வன்றனொ   

                   டயிந்திரவி யாகரணமும்    

ஓதியொரு நாளினி லுணர்ந்தனனிம்   

                   மாருதி யுயர்ந்த புகழோய்.  என்பது இராமாயணம் 

              அத்தகைய ஐந்திர வியாகரணத்தையே இராமனுக்கு முன்னிருந்த தொல்காப்பியரு முணர்ந்தாராதலின் அது கொண்டு தொல்காப்பியர் வியாகரண காலத்தவராதலின் அவர்காலமும் அக்காலமேயென்று உரைத்தல் கூடாது.  பாணினி காலம் கி.மு 900 ஆண்டுகளுக்குமுன் என்று சி.வி. வைத்தியர் (எம்..; எல்.எல்.பி.) என்பார் தமது வேதகால சமஸ்கிருத இலக்கிய வரலாறு என்னும் நூலில் கூறியுள்ளார்.”ஐய்ந்திர முணர்ந்த தொல்காப்பியன்என்பதே பாணினி காலத்துக்கு மிக முந்தியிருந்தார் தொல்காப்பியர் என்பதை உணர்த்தும். ஆதலினாலும் தொல்காப்பியர் வியாகரண காலத்தவரல்லரென்பது துணியப்படும் என்க. கடைச்சங்கம் இருந்தே நாலாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகின்றன என்று கூறுவாருமுண்டு. இவற்றையெல்லாம் நாம் ஆராய்ந்து துணிதல் முடியாதெனினும் தொல்காப்பியம் தொல்காப்பியம் கடைச்சங்க காலத்துக்கு மிக முற்பட்ட பழையதொரு நூலாகும் என்பதை மாத்திரம் துணிந்து கூறலாம். 

                என்னையெனின்? தொல்காப்பியர் நூல் செய்த காலத்து வேதங்கள் இருக்கு முதலியனவல்ல, அவை வியாசராற் பிற்காலத்துப் பகுக்கப்பட்டன என்று தொல்காப்பியப் பாயிரத்துள் நச்சினார்க்கினியர் கூறுவதினானும் , தொல்காப்பியத்திற் சொல்லப்பட்ட சில சொற்களூம் பொருள்களும் கடைச்சங்க நூல்களுக்கு முன்னேயே வழக்கில் வீழ்ந்தன என்று தொல்காப்பிய உரையாசிரியர்கள் கூறுதலினானும் என்க..  

19, 20  இவ்விரண்டு பகுதிகளும் தொல்காப்பியம் சொல்லதிகாரப் திப்புரையில் அறிஞர் சி. கணேசையர் எழுதியுள்ளவையே என்பதறிக.  

............................................தொடரும் ........................................  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக