.................This Blogger For Sale..kalappal. Blogspot. Com .................
Please visit : Analytical Report-2026 –Goole.
தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -44.
முனைவர் இரெ. குமரன்:
தொல்தமிழர் - வழிபாடு : முது வாய் வேலன்:
குறிஞ்சி:
“ தோடு அமை செறிப்பின் இலங்குவளை ஞெகிழ
கோடுஏந்து அல்குல் அவ்வரி வாட
நல்நுதல் சாய படர் மலி அருநோய்
காதலன் தந்தமை அறியாது உணர்த்த
அணங்குறு கழங்கின் முதுவாய் வேலன்
கிளவியின் தணியின் நன்றுமன் சாரல்
அகில்சுடு கானவன் உவல்சுடு கமழ்புகை
ஆடுமழை மங்குலின் மறைக்கும்
நாடுகெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பே.”
-நல்லூர்ச் சிறு மேதாவியர், நற். 282.
தொகுதியாக அமைந்த நிறைந்த வளைகள் நெகிழும் வண்ணம், பக்கம் உயர்ந்த அல்குலின் அழகிய வரிகள் வாட்டமுறும் வகையிலும், நல்ல நெற்றியின் கண்ணே பசலை உண்டாகுமாறும் வருத்தம் மிகுதியாக அளிக்கும் அரிய நோய் நமக்குக் காதலன் தர வந்தது ; இதனை அறியாத அன்னை, வேலனுக்கு இந்நோயை எடுத்துரைக்க, மூதறிவு மிக்க வேலன் முருகனை வழிபட்டுக் கழற்சிக்காய்களை கொண்டு ஆராய்வதாலும் முருகனைக் குறித்து அவ்வேலன் கூறும் சொற்களாலும் நோய் தணிவதாயின் மிக நன்றாம் ; ஆனால் அங்ஙனம் வெறியாட்டு நிகழ்த்தாது இல்லத்தே அடைக்கப்பட்டமையால் ; மலைச் சாரலிடத்தே அகிலைத் தீயிட்டுக் கொளுத்தும் கானவன் சருகுகளின் முதலில் இடும் தீயால் உண்டாகும் நறுமணம் கமழும் புகை வானில் இயங்குகின்ற மேகம் போல் மறைக்கின்ற நாடு விளங்கும் நம் தலைவனுடன் நாம் கொண்ட தொடர்பு கழிந்தது போலும். (மேலும் காண்க - 322.)
( இனி, தலைவன் அவளை மணந்து கொள்வதே தக்கது என்பதை மறைவாக இருந்த தலைவனுக்குத் தோழி உணர்த்தினாள்.)
( தோடு - திகுதி ; படர் - வருத்தம் ; முதுவாய் - மூதறிவு ; உவல் - சருகு.)
..................................................தொடரும்................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக