செவ்வாய், 10 நவம்பர், 2026

தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -62. மருத நிலத்தில் கடவுள் வழிபாடு:

  தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -62. 

  முனைவர் இரெ. குமரன்: 4. பதிற்றுப்பத்து : 

             தொல்தமிழர் -   மருத நிலத்தில் கடவுள் வழிபாடு:   

“ காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது   

 அரிகால் அவித்து பல பூ விழவின்   

தேம்பாய் மருதம் முதல் படக் கொன்று   

வெண்தலைச் செம்புனல் பரந்து வாய் மிகுக்கும்   

பல சூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச்   

 சிறை கொள் பூசலின் புகன்ற ஆயம்  

முழவு இமிழ் மூதூர் விழவுக் காணூஉப் பெயரும்   

செழும் பல்வைப்பின் பழனப் பாலும்....”  

                      - - பாலைக் கெளதமனார், மூன்றாம் பத்து:30 : 14 – 21.  

                                       கரும்பு முற்றி விளைகின்ற காலம் அல்லாத நாட்களிலும் உழவர்கள் கரும்பினை அறுப்பர் ; அவ்வாறு அறுத்தாலும் அறுத்து முடியாது ; அதன்பின் நெற்போரினைத் தள்ளியடிப்பர் ; பலவிதமான பூக்களால் கடவுளை வழிபடும் விழாவினை நிகழ்த்துவர் ; இனிமை சேர்ந்த மருத மரத்தினை அடியோடு சாய்த்து வெள்ளிய நுரையுடன் கூடிய சிவந்த புது வெள்ளம் எங்கும் பரவும் ; அவ்வெள்ளத்தினைத் தடுக்கும் பொருட்டு ,பல வைக்கோல்புரிகள் சூழ்ந்த மணல் கோட்டைகளை அமைப்பர் ; வெள்ளம் அவற்றையும் கரைக்கும் ; மேலும் அணை இடுகின்ற முயற்சியில் ஆரவாரத்தோடு வெள்ளத்தைத் தடுப்பர் ; முழவு ஒலிக்கொன்ற பழைய ஊரில் நிகழும் விழாவைக்கண்டு தம் இடத்திற்குத் திரும்பிச் செல்கின்ற  செழுமையான பல ஊர்களை உடையது மருத நிலம், 

  (பதப்பர் - மணல் கோட்டை ; பரிய - கெட ; புகன்ற - விரும்பிய ; ஆயம் - மக்கள் கூட்டம். செழும்பல் வைப்பின் பழனப் பாலிம் -  மருத நிலம் வளவிய பல ஊர்களைத் தன்னகத்தே கொண்டது.) 

 ...............................................தொடரும்........................................  

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக