வியாழன், 2 செப்டம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –335.

 

தன்னேரிலாத தமிழ் –335.

கரவாது உவந்துஈயும் கண் அன்னார் கண்ணும்

இரவாமை கோடி உறும். –குறள்.1061.

 

உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலாஇன்பம்

உண்டாவதெங்கே சொல் என் தோழா

உழைப்பவரே உரிமை பெறுவதிலேஇன்பம்

உண்டாகுமென்றே சொல் என் தோழா

கல்வி கற்றோமென்ற கர்வத்திலே இன்பம்

கண்டவருண்டோ சொல் என் தோழா

கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச்செய்து

காண்பதில் இன்பம் என் தோழா

இரப்போர்க்கு ஈதலிலும் இரந்துண்டு வாழ்வதிலும்

இன்பம் உண்டாவதில்லை என் தோழா

அரிய கைத்தொழில் செய்து அவரவர் பகிந்துண்டு

அன்புடன் வாழ்வதிலின்பம் என் தோழா

பட்டத்தில் பதவி உயர்வதிலே இன்பம்

கிட்டுவதே இல்லை என் தோழா

 

உனை ஈன்ற தாய்நாடு உயர்வதிலே இனபம்

உண்டாகுமென்றே சொல் என் தோழா.”

--கவிஞர் இலக்குமணதாஸ், படம்: நாடோடி மன்னன், 1958.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக