தன்னேரிலாத தமிழ் –336.
வாராக்கால் துஞ்சா வரிந்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண். –குறள், 1179.
“நீயில்லாத உலகத்திலே நிம்மதியில்லை – உன்
நினைவில்லத இதயத்திலே சிந்தனை இல்லை]
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை-உனைக்
கண்டுகொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை
உன் முகத்தைப் பார்ப்பதற்கே கண்கள் வந்த்து
உன் மார்பில் சாய்வதற்கே உடல் வளர்ந்தது
கன்னி மனம் உனக்கெனவே காத்திருக்குது – இந்தக்
காவல் தாண்டி ஆவலுன்னைத் தேடி ஓடுது
பொன் விலங்கை வேண்டுமென்றே பூட்டிக்கொண்டேனே
உனைப் புரிந்தும் கூட சிறையில் வந்து மாட்டிக்கொண்டேனே
இன்று நாளை என்று நாளை எண்ணுகின்றேன் – நாள்
என்றும் உந்தன் எல்லையிலே வந்திடுவேனே.”
--கவிஞர் கண்ணதாசன், படம் : தெய்வத்தின்
தெய்வம்,1962.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக