தன்னேரிலாத தமிழ் –334.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.-குறள், 969.
“தஞ்சமென்று வந்தவரை தாய்போல் ஆதரித்து
வஞ்சகர்களின் செயல்களுக்கு வாள் முனையில் தீர்ப்பளித்து
அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடம் கொடுத்து
அறங்காக்கும் மக்களிடம் பார்த்த விந்தையை சொல்லட்டுமா?
அதிசயம் பார்த்தேன் மண்ணிலே –அது
அப்படியே நிக்குது என் கண்ணிலே –நான்
அதிசயம் பார்த்தேன் மண்ணிலே –அது
அப்படியே நிக்குது என் கண்ணிலே
மூணு பக்கமும் கடல் தாலாட்டுது –தன்
மானமுள்ள மக்களைப் பாராட்டுது
வானுயர மலையில் அருவி பெருகியே
வந்து வந்து நிலத்தை நீராட்டுது –புது
வளம் பெருகி மறவர் பேர் காட்டுது
மலையை செதுக்கி வச்ச சிலையிருக்குது –அதில்
மனம் கவரும் அழகு கலையிருக்குது
மானிருக்கும் வண்ண மயிலிருக்கும்
செந்தேனிருக்கும் வீரச் செயலிருக்கும்
அங்கே சந்தன மரக்கிளையும் தமிழ் கடலும் – தழுவி
செந்தமிழ் இசைத்துத்
தென்றல் தவழ்ந்து வரும்
செந்தாமரை மலர் தொட்டு மணம் சுமந்து வரும்
இங்கே தங்க நிழலுமில்லை பொங்கிடக் கடலுமில்லை
சற்று நேரங்கூட வெயில் மறைவதில்லை
நம்மைத் தழுவிடத் தென்றலும் வருவதில்லை (அதிசயம்)
--கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,படம்: கலை அரசி. 1963.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக