தன்னேரிலாத தமிழ் –338.
அழல்போலும் மாலைக்குத்
தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும்
படை.-குறள்.1228.
“ அன்புள்ள அத்தான்
வணக்கம் – உங்கள்
ஆயிழை கொண்டாள்
மயக்கம்
தென்னவர் கையிருக்கும்
திருவாளைப் போலிருக்கும்
கண்ணிருந்தும்
இல்லை உறக்கம் (அன்புள்ள)
மாலைப் பொழுது
வந்து படை போலக் கொல்லும்
வருவார் வருவார்
என்ற சேதியும் சொல்லும்
ஆலிலை போன்ற உடல்
ஆசையில் துள்ளும்
அந்தியிலே இயற்கை
என்னையும் வெல்லும் (அன்புள்ள)
பருவம் நிறைந்திருந்தும்
எனக்கென்ன சுகமே
பருகும் இதழிரண்டு
இருந்தென்ன பயனே
கரங்கள் இரண்டிருந்தும்
அணைப்பதற்கில்லை
கண்ணா இனி நான் பொறுப்பதற்கில்லை (அன்புள்ள)
இப்படி எழுதியும்
நான் வரவில்லையென்றால்….?
பொன்மணிமேகலை
பூமியில் விழும்
புலம்பும் சிலம்பிரண்டும்
எனைவிட்டு ஓடும்
கைவளை சோர்ந்து
விழும் கண்களும் மூடும்
காண்பவர் உங்களைத்தான்
பழி சொல்ல நேரும்
அன்புள்ள அத்தான்
வணக்கம்
திருமணம் ஆகுமுன்
வேண்டாம் குழப்பம் (அன்புள்ள)
---கவிஞர் கண்ணதாசன்,படம்: கைராசி,1960.
சிறப்பு ஐயா.
பதிலளிநீக்குஉளங்கனிந்த நன்றி ஐயா..!
பதிலளிநீக்குநன்றி ஐயா...!
பதிலளிநீக்கு