தன்னேரிலாத தமிழ் –342.கன்னி முத்தம்....!
................2.................
பூவே நீ
பூத்தது இன்று
தானோ..?
உருவும் திருவும் நிறைந்த
பருவமே வருக..!
பசுஞ்சோலையே வருக
பைந்தமிழே வருக
சூரியன் ஒளி புகா சோலையுள்
வெள்ளிய நீரருவி
விளங்கிடும்
பளிங்கு நீரோடை!
வாழை மா பலா
புன்னை தென்னை சூழ
தென்றல் தழுவ..
தேனடை சிதற..
மந்திகள் உண்டு
மயக்கத்திலிருக்க
மயில் அகவ..
குயில் கூவ…
அன்னம் அசைய…
மழலை வண்டினம்
நல்யாழ் இசைக்க
வண்ண மலர்
வாச மலர்
பூத்துக் குலுங்கும்
தண்பொழில் நடுவே….!
இலங்கை வேந்தனின்
எழில் மாடம் இயற்றிய
தேவதச்சன் விருப்போடு புனைந்த
தங்கத் தகடு வேய்ந்த ………………தொடரும்……
-----------களப்பாள் குமரன்.கன்னி முத்தம், 1995. .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக