செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –333.

 

தன்னேரிலாத தமிழ் –333.

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்

மண்புக்கு மாய்வது மன். –குறள்,996.

 

 நல்ல நல்ல நிலம் பார்த்து நாமும் விதை விதைக்கணும்

நாட்டு மக்கள் மனந்தனிலே நாணயத்தை வளர்க்கணும் (நல்ல)

 

பள்ளி என்ற நிலங்களிலே கல்வி தன்னை விதைக்கணும்

பிள்ளைகளைச் சீர்திருத்தி பெரியவர்கள் ஆக்கணும்

கன்னியர்க்கும் காளையர்க்கும் கட்டுப்பாட்டை விதித்து

கற்பு நிலை தவறாத காதல் பயிர் வளர்த்து

அன்னை தந்தாயானவர்க்கும் நம் பொறுப்பை விதைத்து

பின்வரும் சந்ததியைப் பேணும்முறை வளர்த்து

இருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்

இல்லாதார் வாழ்க்கையிலே இன்பப் பயிர் வளர்க்கணும் (நல்ல)

 

பார் முழுதும் மனித குலப் பண்புதனை விதைத்து

பாமரர்கள் நெஞ்சத்திலே பகுத்தறிவை வளர்த்து

போர்முறையைக் கொண்டவர்க்கு நேர்முறையை விதைத்து

சீர்வளரத் தினமும் சினேகமதை வளர்த்து

பெற்ற திருநாட்டினிலே பற்றுதனை விதைக்கணும்

பற்றுதனை விதைத்துவிட்டு நல்ல ஒற்றுமையை வளர்க்கணும் (நல்ல)

--கவிஞர் உடுமலை நாராயணகவி, படம்: விவசாயி, 1967.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக