தன்னேரிலாத தமிழ் –316.
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும். –குறள், 321.
இரை போடும் மனிதருக்கே
இரையாகும் வெள்ளாடே
இதுதான் உலகம்
வீண் அனுதாபம் கண்டு நீ
ஒரு நாளும் நம்பிவிடாதே !
டேயண்ணா….டேயண்ணா…
டேயண்ணா
ட்ரியோ டேயண்ணா…ட்ரியோ டேயண்ணா
முறியோடு உழைத்து உண்ண
முடியாத சோம்பேறி
நரிபோல திரிவார் புவிமேலே – நல்ல
வழியோடு போகின்ற
வாய் பேசா உயிர்களை
வதச்சு தின்பார் வெறியாலே
காலொடிந்த ஆட்டுக்காக
கண்ணீர்விட்ட புத்தரும்
கடல்போல உள்ளம் கொண்ட
காந்தி ஏசுநாதரும்
கழுத்தறுக்கும் கொடுமை கண்டு
திருந்த வழி சொன்னதும் உண்டு
காதில் மட்டும் கேட்டு
அதை ரசிச்சாங்க – ஆனா
கறிக்கடையின் கணக்கைப் பெருக்கி வந்தாங்க
!
--கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,
படம் : பதி பக்தி, 1958.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக