தன்னேரிலாத தமிழ் –321.
” ஒருமைக்கண் தான்கற்ற
கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து. –குறள். 398.
“தமிழ்
எங்கள் உயிரானது – காலச்
சுழலாலும் கனலாலும்
அழியாமல் நிலையான (தமிழ்)
படிப்போர்க்குப் பால் போன்றது – தன்னைப்
பகைப்போர்க்கு வேல் போன்றது
தாயகத்தின் தன்மானக்
கலைத் தேரில் சதிராடும் (தமிழ்)
செந்தமிழும் பெண்குரலும் ஒன்றாகட்டும் – தேவ
மங்கையரும் இங்கு வந்து நின்றாடட்டும்
தண்டையிட்டு வந்த அடி செண்டாகட்டும் – நாதம்
தந்திதொட்ட வீணையென உண்டாகட்டும் (தமிழ்)
சிந்துகின்ற புன்முறுவல் முத்தாகட்டும் –தேன்
பொங்குகின்ற கன்னம் பூங்கொத்தாகட்டும்
அந்தி வெயில்பட்டு உடல் பொன்னாகட்டும் –கண்டு
ஆடவர் உள்ளம் சல்லடைக் கண்ணாகட்டும். (தமிழ்)
---கவிஞர் மாயவநாதன், படம் : பூம்புகார், 1964.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக