தன்னேரிலாத தமிழ் –324.
இருள்சேர் இருவினையும்
சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார்
மாட்டு. –குறள்.5.
“ இறைவன்
படைத்த உலகை எல்லாம்
மனிதன் ஆளுகின்றான்
மனிதன் வடித்த சிலையில் எல்லாம்
இறைவன் வாழுகின்றான்
உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்
உண்மை பிறப்பதில்லை
உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்
ஒன்றும் நடப்பதில்லை !
இரண்டு மனிதர் சேர்ந்தபோதும்
எண்ணம் வேறாகும்
எத்தனை கோயில் இருந்தபோதும்
இறைவன் ஒன்றாகும்
இசையால் இறைவனை இரங்க வைப்பது
மனிதனின் குணமாகும் –அந்த
இசையில் மயங்கி இரங்கி வருவது
இறைவன் மனமாகும்.
--கவிஞர் பூவை செங்குட்டுவன், படம் : வா ராஜா வா,1969.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக