திங்கள், 9 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –314.

 

தன்னேரிலாத தமிழ் –314.

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்

நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. –குறள்,1218.

 

மூடியிருந்த என் விழியினுள் வந்தொரு

மோகனக் கள்வன் விளையாடினான்மையல்

மூட்டிடும் மோகன இசை பாடினான் (மூடி)

 

ஈடு இணையில்லாத ஜாலத்தினால் வெறும்

இன்பக் கனவாக மறைந்தோடினான்எல்லாம்

வேடிக்கையாகவே கேளிக்கை காட்டியே

பேதை என் நெஞ்சம் கவர்ந்தோடினான் (மூடி)

 

வானவில் போலே மறைந்தவன் மீண்டும் என்

வாழ்வினில் ஒளி வீச வாரானோ ?

தேனிருந்தும் வண்டு தீண்டா மலராய்தினம்

வாடிமெலிவேனோஏக்கம்

தீராமலே என்றும் நலிவேனோ..? (மூடி)

 ---கவிஞர் கு. மா. பாலசுப்பிரமணியம், படம் : இன்ஸ்பெக்டர், 1953.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக