ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –325.

 

தன்னேரிலாத தமிழ் –325.

பகையென்னும் பண்பி லதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று. –குறள்.871.

 

 பகைகொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம்

தீராத கோபம் யாருக்கு லாபம்

வீட்டுக்கு வெளிச்சம் வருவதற்காக

கூரையை எரிப்பாரோஒரு

வேதனை தன்னை விலைதந்து யாரும்

வாங்கிட நினைப்பாரோ ?

 

இதயத்தைத் திறந்து நியாயத்தைப் பேசு

வழக்குகள் முடிவாகும்

இருக்கின்ற பகையை வளர்த்திடத்தானே

வாதங்கள் துணையாகும்

 

வற்றிய குளத்தைப் பறவைகள் தேடி

வருவது கிடையாது

வாழ்க்கையில் வறுமை வருகிறபோது

உறவுகள் கிடையாது

பாலைவனத்தில் விதைப்பதனாலே

பயிரொன்றும் விளையாது

பட்ட பின்னாலே வருகிற ஞானம்

யாருக்கும் உதவாது.”

 ---கவிஞர் புலமைப்பித்தன், படம்:  எல்லோரும் நல்லவரே, ..

2 கருத்துகள்:

  1. நான் ரசித்த தத்துவப்பாடல்களில் இதுவும் ஒன்று. இத்திரைப்படம் 11.4.1975இல் வெளியானதாக ஆங்கில விக்கிப்பீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு