வியாழன், 5 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் - 310

 தன்னேரிலாத தமிழ் - 310

உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன

மடந்தையொடு எம்மிடை நட்பு. –குறள்,1122.

 

ஈரமில் கேள்வன் உறீஇய காமத் தீ

நீருள் புகினும் சுடும்.” –கலித்தொகை,144.

 

அமுதும் தேனும் எதற்குநீ

அருகினில் இருக்கையில் எனக்கு (அமுதும்)

அருவிதரும் குளிர்நீர் அன்பே இனிமேல்

பிரிந்தால் சுடுநீர் ஆகும் நமக்கு (அமுதும்)

 

நிலவின் நிழலோ உன் வத்னம்புது

நிலைக் கண்ணாடியோ மின்னும் கன்னம்

மலையில் பிறவா மாமணியேநான்

கொய்யும் கொய்யாக் கனியே (அமுதும்)

 

விழியாலே காதல் கதைபேசு

மலர்க்கையாலே சந்தனம் பூசுதமிழ்

மொழியாலே சுவையூட்டும் செந்தேனே

உடல் நான் ; உயிர் நீ தானே !

  ---கவிஞர் சுரதா, படம்: தை பிறந்தால் வழி பிறக்கும், 1958.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக