வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –311.

 

தன்னேரிலாத தமிழ் –311.

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்

காதலை வாழி மதி. –குறள், 1118.

 

வானமீதில் நீந்தி ஓடும் வெண்ணிலாவேநீதான்

வந்ததேனோ ஜன்னலுக்குள் வெண்ணிலாவே

நானும் உன்னைப் பார்த்துவிட்டால் வெண்ணிலாவேமுகம்

நாணியே மறைவதேனோ வெண்ணிலாவே!

 

பட்ட  பகலில் ஜோதி வீசும் வெண்ணிலாவேஉன்னைப்

பார்ப்பதும் ஓர் விந்தையன்றோ வெண்ணிலாவே

வட்டமான உன்முகத்தில் வெண்ணிலாவேஇரண்டு

வண்டுகள் சுழல்வதேனோ வெண்ணிலாவே !.

_( அவள் முகம்,  பகலில் ஒளி வீசும் வெண்ணிலவாம்.)

------கவிஞர் கு.மா. பாலசுப்பிரமணியம், படம் : கோமதியின் காதலன், 1955.

1 கருத்து: