சனி, 7 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –312

 

தன்னேரிலாத தமிழ் –312.

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்

துன்பம் வளர வரும். –குறள்,1223.

பெண்:

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ .. போ

இனிக்கும் இன்ப இரவே நீ வாவா

இன்னலைத் தீர்க்க வா !

ஆண்:

பன்னீர் தெளிக்க பனி பெய்யுமே

பசும்புல் படுக்கப் பாய் போடுமே !

பெண்:

பாலூட்டும் நிலவு தேன் ஊட்டுமே

பாடும் தென்றல் தாலாட்டுமே

புன்னை மலர்கள் அன்பினாலே

போடும் போர்வை தன்னாலே !

ஆண்:

கனி இதழ் காதல் பசி தீர்க்குமே

பெண்:

காண்போம் பேரின்பமே !

ஆண்பெண்;

மயக்கும் மாலைப் பொழுதே நீ போ..போ !

இனிக்கும் இன்ப இரவே நீ வாவா !

இன்னலைத் தீர்க்க வா !

   ---கவிஞர் விந்தன், படம்: குலேபகாவலி, 1955.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக