தன்னேரிலாத தமிழ் –306.
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலம்தீமை யால்திரிந் தற்று.-குறள், 1000.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் – இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை – நீங்கி
வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடைமை
இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் சிலர்
கிணற்றில் இருந்துகொண்டு உலகளப்பார்
நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் –அந்த
நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்?
பாலென அழுவோர்க்குப் பால் தருவோம்
கூழெனத் துடிப்போர்க்குச் சோறிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் – யாவும்
தமக்கென நினைப்போரைச் சிறையிடுவோம்!
----கவியரசு கண்ணதாசன், படம்: கறுப்புப் பணம், 1964.
நான் ரசித்த பாடல்களில் ஒன்று. திரைப்படத்தில் காட்சியும் சிறப்பாக இருக்கும்.
பதிலளிநீக்கு