ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –331.

 

தன்னேரிலாத தமிழ் –331.

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க

சொல்லேர் உழவர் பகை. –குறள், 872.

 

சங்கே முழங்கு ….சங்கே முழங்கு…..சங்கே முழங்கு

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்

மங்காத தமிழென்று சங்கே முழங்கு

எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்

இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே

பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்

சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு

 

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும்…

பொங்கும் கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம்

நாங்கள் ஆண்மை சிங்கத்தின் கூட்டமென்றும்

சிறியோர்க்கு ஞாபகம் செய்து முழங்கு சங்கே

 

வெங்கொடுமை சாக்காட்டில்

விளையாடும் தோள் எங்கள் வெற்றித் தோள்கள்

கங்கையைப் போல் காவிரி போல்

கருத்துக்கள் ஊறுமுள்ளம் எங்கள் உள்ளம்

வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரம்செய்கின்ற தமிழ் எங்கள் மூச்சாம்.

--புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், படம்: கலங்கரை விளக்கம்,1965.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக