தன்னேரிலாத தமிழ் –320.
நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். –குறள். 334.
“இறந்தவனைச் சுமந்தவனும்
இறந்திட்டான் – அதை
இருப்பவனும் எண்ணிப்பார்க்க
மறந்திட்டான் (இறந்த)
பறந்து பறந்து பணம் தேடி
பாவக்குளத்தில் நீராடி
பிறந்துவந்த நாள் முதலாய்
பேராசையுடன் உறவாடி (இறந்த)
தாயாரின் வேதனையில் பிறக்கிறான் – மனுசன்
தன்னாலே துடிதுடிச்சி இறக்கிறான் – இடையில்
ஓயாத கவலையிலே மிததக்கிறான் – ஒருநாள்
உடலை மட்டும் போட்டு எங்கோ
பறக்கிறான் – அப்படி (இறந்த)
இளமையிலே சில நாள் முதுமையிலே
சில நாள்
இன்பத்திலே சில நாள் துன்பத்திலே
சில நாள்
அன்னையும் மனைவியும் அருமைப்
பிள்ளையும்
கண்ணீர் சிந்திடவே கடைசி
வழி ஒரு நாள் –அப்படி (இறந்த)
--கவிஞர் ஆலங்குடி சோமு, படம் : இரவும் பகலும், 1965.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக