தன்னேரிலாத தமிழ் –317.
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். –குறள்.281.
திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே (திரு)
சிந்தித்துப் பார்த்துச் செய்கையை மாத்து – தவறு
சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா –அது
திரும்பவும் வராமே பாத்துக்கோ (திரு)
திட்டம் போட்டுத் திருடற கூட்டம்
திருடிக்கொண்டே இருக்குது – அதைச்
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது !
திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது (திரு)
கொடுக்கிற காலம் நெருங்குவதால் – இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய் போனால்
பதுக்குற வேலையும் இருக்காது
ஒதுக்குற வேலையும் இருக்காது
உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்கிற நோக்கம் வளராது
மனம் மேலும் கீழும் புரளாது (திரு).
--கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், படம்: திருடாதே. 1961.
அருமையான தத்துவப்பாடல்களில் ஒன்று.
பதிலளிநீக்கு