தன்னேரிலாத தமிழ் –330.
மங்கலம் என்ப மனைமாட்சி
மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. – குறள்,60.
“ஆனந்தம் இன்று ஆரம்பம் –மனம்
அன்பில் பிணைந்தால் –பின்
அதுவே பேரின்பம் (ஆனந்தம்)
ஆடும் கடலும்
பொன்னி
யாறும் கலந்தது போல்
கூடும் இவர்களிரு
பேரும் தேடும் உயர் (ஆனந்தம்)
மீனுடன் மானும்
மங்கை
விழிகளில் துள்ளுதே
விந்தைமிகும்
மெளனம்
வீரத்தை வெல்லுதே
தேனைச் சுமந்த
மலர்
மாலைச் சுமந்த அவள்
நாணிக் குனிந்த
முகம்
நல்ல பண்பைச் சொல்லுதே (ஆனந்தம்)
நல்ல குடும்பம்
ஒரு
பல்கலைக் கழகம் என்று
தெள்ளுத் தமிழ்க்
கவிஞன்
தெளிவுரை சொன்னதுண்டு
இல்லறம் ஏற்பவர்கள்
இதனை மனதில் கொண்டு
இன்பமுடன் நடந்தால்
வாழ்வுக்கு மிக நன்று (ஆனந்தம்)
--கவிஞர் பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம், படம்: கல்யாணிக்கு கல்யாணம், 1959.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக