தன்னேரிலாத தமிழ் –323.
தேவர்
அனையர் கயவர் அவரும்தாம்
மேவன
செய்துஒழுக லான்.-குறள்.1073.
“சிந்தித்தால் சிரிப்புவரும்
மனம் நொந்தால் அழுகைவரும்
தென்றலும் புயலாய் மாறி மாறி
வரும் மானிடரின் வாழ்வே (சிந்தி)
மோசடிப் பாதையிலே
காசினைச் சேர்த்தாலும்
பாசமுடன் புகழ்பாடி
பலபேரும் வரவேற்பார்
வாசமில்லா மென்மலராய்
வாடிய ஒரு பூங்கொடியாய்
வாழ்வில்
நல்லவனே தாழ்வினை அடைவதா? (சிந்தி)
வானம் தனிலே திரியும்
பறவை மிருகமெல்லாம்
வயிற்றுப் பசியாலே
வாடி மடிவதில்லை
மனதிலே சிறந்தவனாம்
மண்ணிலே உயர்ந்தவனாம்
மனிதனை நினைத்தாலே
மாபெரும் வெட்கமடா ! (சிந்தி)
--கவிஞர் திருச்சி தியாகராஜன், படம் ; செங்கமலத்தீவு, 1962.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக