தன்னேரிலாத தமிழ் –309.
மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார். –குறள்,1289.
பெண்: கண்ணில் வந்து மின்னல் போல் காணுதே –இன்பக்
காவியக் கலையே ஓவியமே !
ஆண்: செங்கனி
போல் சுவைதரும் மா மணி எனப்
பாடிடும் பூங்குயிலே –இன்பக்
காவியக் கலையே ஓவியமே !
பெண்: சுடர்
மின்னல் கண்டு தாழை மலர்வது போலே
உன்னைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தேனே !
ஆண்: நீலவானம்
இல்லாத ஊரே இல்லை
உலகினிலே மழையின்றி வாழ்வே இல்லை
அமுதே உனையன்றி வாழ்வே இல்லை
அன்பே இது உண்மையே !
பெண்: அங்கும்
இங்கும் விளையாடி அலை போலே உறவாடி
ஆனந்தம் காணும் நேரம் தானே
உள்ளத்தில் ஆசையே உன்னைத் தேடுதே !
ஆண்: கொஞ்சிப்
பேசுங் கிளியே நல் இன்பம் தரும் ஜோதியே
மானே ! மலரினும் மெல்லியது – காதலே !
பெண்: மகிழ்வோம்
நாமே !
----கவிஞர் சுரதா, படம்: நாடோடி மன்னன், 1958.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக