தன்னேரிலாத தமிழ் –319.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. – குறள். 1.
“செந்தமிழே
வணக்கம் –ஆதித்
திராவிடர் வாழ்வினைச் சீரோடு விளக்கும் (செந்தமிழே)
ஐந்து இலக்கணங்கள் ஆய்ந்தே உலக
அரங்கினுக்கே முதன்முதல் நீ தந்ததாலும்
மக்களின் உள்ளமே கோயில் என்ற
மாசற்ற கொள்கையில் வாழ்ந்ததனாலே
பெற்ற அன்னை தந்தை அன்றி
பிறிதொரு தெய்வம் இல்லை என்பதாலே (செந்தமிழே)
சாதி சமயங்கள் இல்லா – நல்ல
சட்ட அமைப்பினைக் கொண்டே
நீதிநெறி வழிகண்டாய் எங்கள்
நெஞ்சினிலும் வாழ்வினிலும் ஒன்றாகி நின்றாய் ! (செந்தமிழே)
----கவிஞர் முத்துக்கூத்தன், படம்: நாடோடி மன்னன்,1958.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக