ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –313.

 

தன்னேரிலாத தமிழ் –313.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல. –குறள்,4.

 

ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்அவன்

அன்பு மனங்களில் சிரிக்கின்றான் (ஆண்டவன்)

 

 வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ப்பொருளாய்

விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய் (ஆண்டவன்)

 

நல்லவர் போல் வெளி வேஷங்கள் அணிந்து

நடிப்பவர் நடுஇல் இருப்பதில்லை

நாணயத்தோடு நல்லறங்காத்து

நடப்பவர் தம்மை மறப்பதில்லை (ஆண்டவன்)

 

தன்மானம் காப்பதிலேஅன்னை

தந்தையைப் பணிவதிலே

பிறந்த பொன்னாட்டின் நல்ல முன்னேற்றம் காண

பொதுப்பணி புரிபவர் மகிழ்ச்சியிலே   (ஆண்டவன்)

    --கவிஞர் எம்.கே. ஆத்மநாதன்,படம் : நல்லவன் வாழ்வான், 1961.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக