திங்கள், 2 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –307

 

தன்னேரிலாத தமிழ் –307.

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்பது இல்லாயின் நன்று. –குறள்,49.

 

ஒருவனுக்கு ஒருத்தி என்ற

உயிர் மூச்சை உள்ளடக்கி

அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன் பழிப்பது இல்லாயின் நன்றுஎனும்

திருக்குறளை மறவாதே! திசை தவறிப் போகாதே1

 

வாழ்க்கை எனும் ஓடம்

வழங்குகின்ற பாடம்

மானிடரின் மனதிலே

மறக்கவொண்ணா வேதம்! (வாழ்க்கை)

 

வாலிபம் என்பது கலைகின்ற வேடம்அதில்

வந்தது வரட்டும் என்பவன் முழுமூடன்

வருமுன் காப்பவன் தான் அறிவாளிபுயல்

வருமுன் காப்பவன் தான் அறிவாளி

வந்த பின்னே தவிப்பவன் தான் ஏமாளி (வாழ்க்கை)

 

துடுப்புகள் இல்லாத படகு  - அலைகள்

அழைக்கின்ற திசையெல்லாம் போகும் தீமையைத்

தடுப்பவர் இல்லாத வாழ்வும்அந்தப்

படகின் நிலை போல ஆகும்.”

---கலைஞர் மு. கருணாநிதி, படம்: பூம்புகார், 1964.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக