செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

தன்னேரிலாத தமிழ் –308.

 

தன்னேரிலாத தமிழ் –308.

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப

கோடியும் அல்ல பல. –குறள், 337.

ஆடி அடங்கும் வாழ்க்கையடா

ஆறடி நிலமே சொந்தமடா

முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா

கண் மூடினால் காலில்லாக் கட்டிலடா! (ஆடி)

 

பிறந்தோம் என்பதே முகவுரையாம்

பேசினோம் என்பதே தாய்மொழியாம்

மறந்தோம் என்பதே நித்திரையாம்

மரணம் என்பதே முடிவுரையாம் (ஆடி)

 

சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்

தீமைகள் செய்பவன் அழுகின்றான்

இருப்போம் என்றே நினைப்பவன் கண்களை

இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

 

வகுப்பார் அதுபோல் வாழ்வதில்லை

வந்தவர் யாரும் நிலைத்ததில்லை

தொகுப்பார் சிலரதைச் சுவைப்பதில்லை

தொடங்குவார் சிலரதை முடிப்பதில்லை. (ஆடி)

 ---கவிஞர் சுரதா, படம்: நீர்க்குமிழி, 1965.

1 கருத்து: