தன்னேரிலாத தமிழ் –318.
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. – குறள், 65.
”சின்னச்
சின்ன நடை நடந்து
செம்பவள வாய் திறந்து
அம்மா, என்று நீ அழைத்தால்
அமுதகானம் பொழியுதடா !
விண்ணிலாடும் வெண்ணிலவே
வீட்டிலாடும் மணிவிளக்கே
உன்னில் உயர்ந்தவர் உலகில் யாரோ?
கண்ணிலாடும் காவியமே ! (சின்ன)
ஆடிவரும் தென்றல் என்பார்
பாடிவரும் அருவி என்பார்
தேடிவரும் செல்வம் உன்போல்
தெய்வம் வேறு இல்லையடா (சின்ன)
கொஞ்சும் மழலைக் கேட்கையிலே
குழலும் யாழும் பொய்யன்றோ
மேலும் தமிழே உன்னையன்றி
வேறு சொந்தம் இல்லையடா ! (சின்ன)
---கவிஞர் பி.கே. முத்துச்சாமி, படம்: காவேரியின்
கணவன், 1959.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக