இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…62.
அதிவீரராம
பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை)
“அச்சமும் நாணமும் அறிவிலோர்க்கு இல்லை.”
தன்மானம் தாழாது நடக்க விரும்புவனே நல்ல மனிதனாவான்.அறிவில்லாத முட்டாள்கள்
தன்மானம் கெட்டு அழிய நடந்து கொள்வார்கள், அவர்கள் பிறர்க்குத் தீமை செய்வதற்கு அஞ்சாது
அதனையே தொழிலாகக் கொண்டு திரிவர்; நாணம் எனும்
நற்குணம் உடைய நல்லோர் பழிக்கு அஞ்சி நடப்பார், ஆனால் அறிவில்லாத முட்டாள்கள் பிறர்க்குக்
கேடு செய்தால் பிறரால் பழிக்கப்படுவோமே என்பதறியாது பழிக்கு அஞ்சாது, வெட்கப்படாது
நடந்துகொள்வர் .
“கரப்புடை
உள்ளம் கனற்றுபவரே
செருப்பிடைப்
பட்ட பரல் ..”- முன்றுறை அரையனார், பழமொழி: 224.
பிறரை
வருத்தும் வஞ்சக மனம் கொண்டோர் செருப்பில் அகப்பட்ட பருக்கைக்கல் ஒப்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக