இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…58.
அதிவீரராம
பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)
”சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்
பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே.”
அறிவற்றவர்கள்
செய்யும் சிறு தவறுகளை அறிவுடையோர் பொறுத்துக்கொண்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கி நல்வழியைக்
காட்ட வேண்டும்.
“பிழைத்த பொறுத்தல் பெருமை சிறுமை
இழைத்த தீங்கு எண்ணி இருத்தல்.” –காரியாசான், சிறுபஞ்சமூலம் :14.
பிறர்
செய்த தவறைப் பொறுத்தல் பெருமை ; பிறர் செய்த தீமையை எண்ணிக்கொண்டிருத்தல் சிறுமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக