இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…60.
அதிவீரராம
பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)
”எக்குடி பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்.”
மனித
குலத்தை ஒரேகுலமாக்க் கருதாதாத சிலர் தாம் உயர்ந்த குலத்தில் பிறந்தவர் என்றும் ஏனையோர்
தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்றும் பிதற்றித்திரிவர். எந்தக் குலத்தில் பிறந்தாலும்
யாராக இருந்தாலும் கற்றவரை உயர்வாக மதித்துப் போற்றுவர்.
“……………………………ஒருகுடியில்
கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்
இளமை பாராட்டும் உலகு.” –விளம்பி நாகனார், நான்மணிக்கடிகை:63.
ஒரு
குடும்பத்தில் கல்வி கற்காதவன் மூத்தவனாயினும் அவனை எவரும் மதிக்கமாட்டார் ; கற்றவன்
இளைஞனாயினும் அவனையே எல்லோரும் மதித்துப் போற்றுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக