இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…57.
அதிவீரராம
பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)
”பெருமையும் சிறுமையும் தான்
தர வருமே.”
தான்
செய்யும் நல்வினை தீவினைக்கேற்பவே ஒருவனுக்கு உயர்வும் தாழ்வும் உண்டாகுமே அன்றி, எவ்வகையிலும் பிறர் காரணம் ஆகார்.
“யதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணீதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவதன்றே
…………………………… கணியன் பூங்குன்றனார், புறநானூறு;192.
எவ்வூரும்
நம் ஊரே; மக்கள் அனைவரும் நம் உறவினரே
நன்மையும் தீமையும் நம்மால் விளவதே;
பிறர் தர வருவதன்று
இன்பமும் துன்பமும் கூடப் பிறர்தரவருவதில்லை ; நாம்
தான் அதற்குக் காரணம்.
சாதல் கூட ப் புதியதன்று, அதுஇயற்கையின் இயல்பான
நிகழ்வே; இறப்பு, உலக உயிர்களுக்குப் பொதுவானதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக