இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…49.
அதிவீரராம
பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)
”உண்டிக்கு அழகு விருந்தோடு
உண்டல்”
வீட்டிற்கு
வந்த விருந்தினரை முகமலர்ச்சியுடன் வரவேற்று அவருடன் கலந்து உரையாடி மகிழ்ந்து, உணவு
உண்ணுதலே நல்ல குடும்பத்துக்கு நன்மை பயக்கும் செயலாகும்.
“உப்பு இலிப் புற்கை உயிர்போல் கிளைஞர் மாட்டு
எக் கலத்தானும் இனிது..” – சமணமுனிவர்கள், நாலடியார்; 21.6.
உப்பு இல்லாத கூழும் இனிது
தன்னை உயிர்போல் நேசிக்கின்ற உறவினர் இடும் உப்பில்லாத
புல்லரிசிக் கூழ் எந்தப் பாத்திரத்தில் கிடைப்பதாயினும் அது இனிமை உடையதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக