இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…48.
அதிவீரராம
பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)
”மந்திரிக்கு அழகு வரு பொருள் உரைத்தல்.”
இயற்கையாலோ
செயற்கையாகவோ நாட்டில் விளையும் நன்மை தீமைகளை அறிவு நுட்பத்தால் முன்னரே ஆராய்ந்து
அறிந்து ஆளும் அரசனுக்கு எடுத்துரைப்பதே அமைச்சருக்குப் பெருமையாம்..
”மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்
நன்று அறி உள்ளத்துச் சான்றோர்.” –அரிசில் கிழார், பதிற்றுப்பத்து; 72.
மக்களைக்
காப்பதற்குரிய அறிவுரைகளக் கூறும் அறம் நிறைந்த உள்ளத்தை உடைய சான்றோர்.( அமைச்சர்
எனப்படுவர்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக