இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…35.
ஒளவையார் இயற்றிய நல்வழி.
”செய்த
தீவினைஇருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த
வருமோ இருநிதியம் – வையத்து
அறும்
பாவம் என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று
வெறும்
பானை பொங்குமோ மேல்.”
அறவழி நின்றால் செய்த பாவம் நீங்கும் என்பதை உணராது அறவழி நீங்கினார் இப்போது
வறுமையில் வாழ்கின்றனர். அவர்களுடைய வறுமைக்குக் காரணம் அவர்கள் செய்த தீவினைகளே என்பதை
உணராமல் தெய்வத்தை நொந்துகொள்வதால் பயனில்லை.
பால் பானை பொங்கும் ; வெறும் பானை பொங்குமோ..? நல்வினை ஆற்றினால் நன்மையே
விளையும் ; தீவினை செய்தால் தீமையே விளையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக