இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…33.
ஒளவையார் இயற்றிய நல்வழி.
”ஆற்றங்
கரையின் மரமும் அரசறிய
வீற்றிருந்த
வாழ்வும் விழுமன்னே – ஏற்றம்
உழுதுண்டு
வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு
வேறுஓர் பணிக்கு.”
ஆற்றங்கரை
ஓரத்தில் நிற்கும் மரமும் என்றாவது ஒரு நாள் மண் அரிக்க வீழும். அரசாட்சி போன்ற பிற
உயர்ந்த பணிகளும் குற்றம் உடையதாகி அவையும் ஒரு நாள் வீழும் ; இவை எல்லாம் போற்றுதற்குரியன
ஆகா. ஆனால் என்றும் பெருமைக்கும் போற்றுதலுக்கும் ஒப்பில்லாத உயர்ந்த வாழ்வாவது உழுதுண்டு வாழும் வாழ்க்கையே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக