இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…23.
ஒளவையார் அருளிய மூதுரை
உடன் பிறப்பும் அயலாரும்
“உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி – உடன்பிறவா
மாமலை யிலுள்ள மருந்தே பிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரும் உண்டு.”
உடம்புடன்
பிறந்த நோயே உடலை அழிப்பது போல உடன்பிறந்தவர்களே நமக்குத் தீங்கு செய்வதுண்டு. நமக்குத்
தொடர்பில்லாத மலையில் தோன்றிய மருந்து நம் நோயைத் தீர்ப்பதுபோல, நமக்கு அயலவர்களால்
நன்மை விளைவதும் உண்டு.
உரையாசிரியர்
: பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.
இணைப்பு:
”வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.” –குறள்; 882.
வாளப்போல்
வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்யதில்லை; ஆனால் உறவினரைப் போல் இருந்து உட்பகை கொண்டவரின்
தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக