இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…39.
ஒளவையார் இயற்றிய நல்வழி.
”மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை
– தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல்
பத்தும்
பசி வந்திடப் போம் பறந்து.”
பெருமைக்குரிய குணங்களைக் கொண்டு நல்லவனாக வாழ்ந்து வருபவனாயினும் ; வறுமையில்
துன்புறும் நிலை வருமேயானால் , அவன் உயிரினும் மேலாகப் போற்றிப் பாதுகாத்து வந்த ,
மானம், குடிப்பிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடைமை, பதவி, தவம், உயர்வு, தொழில் முயற்சி,
காதல் ஆகிய பத்தும் பசி வந்தால் பறந்துபோகும்.
‘பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே” –புறநானூறு.173.
பசி நோயைத் தீர்க்கும் மருத்துவனாகிய சிறுகுடி பண்ணனின் இல்லம் அருகிலா….தொலைவிலா…?
கூறுங்கள் எமக்கே.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக