இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…30.
ஒளவையார் இயற்றிய நல்வழி.
”ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல் கூர்ந்தார் ஆனாலும்
இல்லை என மாட்டார் இசைந்து.”
ஆறு, நீரற்று வற்றிக் கிடக்கும் காலத்தும், கோடை வெயிலால் உயிர்கள் பருகுவதற்கு நீரின்றி வருந்தித்
துன்புறும்போது ஆற்றில் தோன்றும் ஊற்று நீர் உலக உயிர்களை வாழவைக்கும். அதுபோல, நல்ல
குடியில் பிறந்தவர்கள் எல்லாவற்றையும் இழந்து வறுமையுற்ற போதும் தம்மிடம் உதவி வேண்டி
வருகின்றவர்களுக்கு, இல்லை என மறுத்துக் கூறாது
தம்மால் இயன்ற அளவு உதவி செய்வர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக